கில் தில் சினிமா விமர்சனம்

நடிகர் : கோவிந்தா, ரன்வீர் சிங், அலி ஜாபர்
நடிகை : பரினிதி சோப்ரா
இயக்குனர்: ஷாத் அலி


தாதா ஒருவருக்கும், அவரிடம் அடியாட்களாக இருக்கும் இரண்டு சகோதரர்களுக்கும் இடையே நடக்கும் கதை தான் கில் தில். ரன்வீர் சிங், அலி ஜாபர், பரிணிதி சோப்ரா ஆகியோருடன், மாஜி ஹீரோ கோவிந்தா, ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு சினிமாவில் ரீ-என்டரியாகி வெளிவந்திருக்கிறது இந்த கில் தில். வாரத்திற்கு நான்கு, ஐந்து படங்கள் ரிலீசாகும் வேளையில், இந்தவாரம் சோலோ பெர்பார்மென்சாக, வசூலை குவிக்க ஏதுவாகவும் வந்திருக்கிறது கில் தில். இனி கில் தில் ரசிகர்களை கவர்ந்ததா...? என்று பார்ப்போம்.

குப்பை தொட்டியில் அனாதையாக கிடந்த டுட்டு(அலி ஜாபர்), தேவ்(ரன்வீர் சிங்) ஆகிய இருவரையும் எடுத்து வளர்க்கிறார் லோக்கல் ரவுடியான கோவிந்தா. அவர்களை தன் சுய லாபத்திற்காக கொலை, கொள்ளை போன்ற தப்பான செயல்களில் ஈடுபடுத்துகிறார். சகோதரர்களான அலி ஜாபர், ரன்வீர் சிங் இருவரும், கோவிந்தாவின் சொல்படி நடந்து வருகின்றனர். ஒரு சமயம், ரன்வீர் சிங் பணக்கார பெபண்ணான ஹீரோயின் திஷா எனும் பரிணிதி சோப்ராவை எதேச்சையாக பார்க்கிறார். வழக்கமான சினிமாக்களில் வருவதை போன்று பார்த்ததும் இருவருக்கும் காதல் தொற்றி கொள்கிறது. இருவரும் காதலித்து வருவது கோவிந்தாவிற்கு பிடிக்கவில்லை, அதனால் அலி ஜாபரை வைத்து அவர்களை பிரிக்க திட்டமிடுகிறார். இறுதியில் ரன்வீர் சிங் திருந்தி காதலியுடன் சென்றாரா.? இல்லை காதலை துறந்து, கோவிந்தாவுடன் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாரா...? என்பது படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை.

தேவ் எனும் ரன்வீர் சிங் வழக்கம் போலவே தனது நடிப்பில் மிளிர்கிறார். ஆக்சன் காட்சிகளிலும் சரி, பரிணிதி உடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி வெளுத்து வாங்கியிருக்கிறார்.

அழகிய உடல் தோற்றமும், வசிகரிக்கும் முகமுமாக திரையில் தோன்றும் திஷா எனும் ஹீரோயின் பரிணிதி சோப்ராவின் நடிப்பும் சூப்பர்ப்.

சிறு இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரியாகி இருக்கும் கோவிந்தாவிற்கு இந்தப்படம் சிறப்பாகவே அமைந்துள்ளது என்றே சொல்லலாம். தனது முந்தைய படங்களில் காமெடியும், ஹீரோயிசமும் பண்ணி வந்த கோவிந்தா, இப்படத்தின் மூலம் வில்லனாகவும் ஜொலித்திருக்கிறார்.

ரன்வீர் சிங் போலவே அலி ஜாபரும் தன் கேரக்டர் என்ன என்பதை உணர்ந்து சரியாக நடித்திருக்கிறார்.

ஷங்கர்-இஷான்-லாயின் இசையில், ஹேப்பி பர்த்டே..., கில் தில்... போன்ற பாடல்கள் ரசிகர்களை ஆட வைத்திருக்கிறது. அவீக் முகோபாத்யாயேயின் ஒளிப்பதிவு ஒளி ஓவியமாக தெரிகிறது. ரித்தேஷ் சோனியின் படத்தொகுப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. சாத்தியா, பன்ட்டி ஆர் பப்ளி போன்ற படங்களை இயக்கிய ஷாத் அலி, ரசிகர்களுக்கு போர் அடிக்காதபடி கதையையும், திரைக்கதையையும் நேர்த்தியாக சொல்லி, மீண்டும் ஒரு சிறந்த பொழுதுபோக்கான படத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வசனக்காட்சிகளுக்கு தியேட்டரில் ரசிகர்களின் கைத்தட்டல் அள்ளுகிறது.

ஆற்றல் மிக்க ஹீரோ ரன்வீர் சிங்கிற்காகவும், செயல்திறன் மிக்க கோவிந்தாவிற்காகவும் கில் தில் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

மொத்தத்தில், கோவிந்தாவை திரும்ப அழைத்து வந்திருக்கிறது இந்த ""கில் தில்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget