மாதவன் புதுப்பட மொன்றில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். ஏற்கனவே பிரியங்கா சோப்ரா குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமாக
நடித்துள்ளார். தற்போது மாதவனும் குத்துச்சண்டை வீரர் வேடம் ஏற்கிறார். இந்த படம் தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. ‘லால்’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் வாழ்க்கை கதையில் ஒரு பகுதி இந்த படத்தில் இடம் பெறுகிறது.
இதில் நடிப்பதற்காக மாதவன் 15 கிலோ உடல் எடை குறைத்துள்ளார். அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பல நாட்கள் முகாமிட்டு கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு எடை குறைப்பு செய்துள்ளார். இது குறித்து மாதவன் கூறும்போது, எனது கேரக்டருக்கு பொருத்தமாக லாஸ்ஏஞ்சல்சில் பயிற்சிகள் மேற்கொண்டு உடல் அமைப்பை மாற்றி இருக்கிறேன். உடல்மொழியும் மாறி இருக்கிறது. இப்போது என் நடவடிக்கைகள் மற்றும் சிந்தனைகள் எல்லாமே ஒரு குத்துச்சண்டை வீரர் போலவே இருக்கிறது என்றார்.
இந்த படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா டைரக்டு செய்கிறார்.

கருத்துரையிடுக