ஸ்டியூ சிக்கன் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

1 .எலும்புடன் உள்ள சிக்கன் – 250 கிராம்
2 .உருளைக்கிழங்கு – 1
3 .தேங்காய் துருவல் – கால் மூடி

4 .வெங்காயம் – 2
5 . காரட் – 1
6 .உப்பு – தேவையான அளவு

7 .எண்ணெய் – சிறிதளவு
8 .மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
9 .பச்சை மிளகாய் – 2
10 .கறிவேப்பிலை – சிறிதளவு
11 .இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
12 .கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை :

முதலில் கறியும், எலும்பும் சேர்ந்த துண்டுகளாக எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வதக்கிய பின்பு கறியை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். கறி பாதி வெந்ததும் காரட், உருளைக்கிழங்கு போட்டு உப்பு, வெங்காயம் சேர்த்து மூடி வைக்கவும். பின்பு நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை போடவும். கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும். ஸ்டியூ சிக்கன் ரெடி
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget