1 .சிக்கன் – அரை கிலோ
2 .வெங்காயம் – 2
3 .தக்காளி – 1
4 .பச்சைமிளகாய் – 3
5 .இஞ்சி – 1 துண்டு
6 .பூண்டு – 1
7 .தேங்காய் துருவல் – அரை மூடி
8 .எண்ணெய் – தேவையான அளவு
9 .பட்டை – சிறிதளவு
10 .எலுமிச்சைபழம் – பாதி மூடி
11 .லவங்கம் – சிறிதளவு
12 .மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
13 .கிராம்பு – சிறிதளவு
14 .சாம்பார் மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
15 .கசகசா – சிறிதளவு
16 .உப்பு – தேவையான அளவு
17 .இலை – 1
செய்முறை :
கறியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு அரைத்து கொள்ளவும். தேங்காய் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கறியை போட்டு அதில் மிளகாய்த்தூள், சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு,எலுமிச்சைபழம் இவை எல்லாவற்றையும் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, லவங்கம், கசகசா, இலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவை மூன்றையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு அரைத்த இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்பு கறியை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
சுவையான வறுவல் ரெடி.
கருத்துரையிடுக