பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் தனது 41வது பிறந்தநாளை நேற்று (நவம்பர்1) கொண்டாடினார். தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்
பிறந்தநாளை கொண்டாடிய ஐஸ்வர்யாவிற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா, எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கு எனது நன்றி. இது ஒரு சிறப்பான நாளாகவே நான் நினைக்கிறேன். சிறந்த குடும்ப தினமும் கூட. ஸ்பெஷலாக கொண்டாட எந்த திட்டமும் இல்லை. வழக்கம் போல் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுகிறேன். எனது மகள் ஆராத்யாவின் 3வது பிறந்த நாளும் நவம்பரில் வருவதால் அதை விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு வருகிறோம் என்றார்.
தொடர்ந்து அவரிடம், உங்கள் அழகு மாறாமல் இருப்பதற்கான ரகசியம் என்னவென்று கேட்தற்கு, அன்பானவர்களின் அன்பும் நல்வாழ்த்துக்களும் தான் அதற்கு காரணம். அதனால் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அந்த மகிழ்ச்சி என் அழகை பாதுகாக்கிறது. அழகு என்பது பார்ப்பவரின் கண்ணகளில் உள்ளது. ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நான் யாரிடமும் வாழ்த்துக்களையும் கேட்கவில்லை. அவர்களின் அன்பும் நலமும் போதும். ஒவ்வொரும் நலமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்பதையே கேட்கிறேன். இதைத் தவிர எனக்காக நான் எதையும் கேட்கவில்லை என்றார்.

கருத்துரையிடுக