மகிமாவின் ஆசை நிறைவேறுமா

சாட்டை படத்தில் அறிமுகமான மகிமாவுக்கு மங்களூர் பக்கம் உள்ள காசர்கோடுதான் சொந்த ஊர். சாட்டைக்கு பிறகு பிளஸ் 2 படிக்க
போய்விட்டார். படிப்பை முடித்த கையோடு மீண்டும் கோடம்பாக்கம் திரும்பி நடிக்க ஆரம்பித்தார். என்னமோ நடக்குது படத்தில் ஓரளவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. அகத்தினை, மொசக்குட்டி படங்களில் நடித்து முடித்து விட்டார். தற்போது சமுத்திரகனியின் கிட்னா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார்.ஆனாலும் மகிமாவுக்கு ஆக்ஷன் படங்களில்தான் நடிக்க மிகவும் ஆசை. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சண்டை படங்களை விரும்பி பார்ப்பேன். அதிலும் குறிப்பாக பெண்கள் சண்டையிடும் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். சால்ட் படத்தில் -ஏஞ்சலினா ஜோலியின் சண்டை காட்சிகளை சலிக்காமல் பார்ப்பேன். சைனீஷ் படங்களில் பறந்து பறந்து சண்டைபோடும் ஹீரோயின்களை கண்கொட்டாமல் பார்ப்பேன். விஜயசாந்தி மேடத்தை அவர்களின் சண்டைக்காகவே பிடிக்கும். அதனால்தான் எனக்கும் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அதற்கேற்ற உயரமும், உடல்வாகும் எனக்கு இருக்கிறது. அதே மாதிரி மேரிகோம் மாதிரி லைவ் கேரக்டர்களிலும் நடிக்க ஆசை. அதெல்லாம் நடக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் மகிமா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget