கோலிவுட்டில் வலம் வரும் கன்னடத்து கிளிகள்

தமிழ் சினிமா எப்போதும் ஹீரோயின்களை தமிழ் நாட்டில் தேடாது என்பது எழுதப்படாத சட்டம். கடந்த ஆண்டு வரை தமிழ் சினிமாவை
மலையாளத்து தேவதைகளும், மும்பை மாடல்களுமே ஆக்கிரமித்திருந்தார்கள். சமீபகாலமாக கன்னடத்து பைங்கிளிகளின் ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது. ப்ரியாமணி, ராய் லட்சுமி, மனீஷா யாதவ் என அவ்வப்போது வந்த பைங்கிளிகள் வந்து கொண்டிருந்தாலும் இப்போது அதிகமாக வரத் தொடங்கியிருக்கிறது. முன்பு புதுப்படங்களுக்கு ஹீரோயின்கள் தேட கொச்சிக்கும், மும்பைக்கும் பறந்த கொண்டிருந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இப்போது பெங்களூருக்கு படையெடுக்கிறார். கோடம்பாக்க சரணாலயத்திற்கு சமீபத்தில் வந்து சேர்ந்த சில கன்னட பைங்கிளிகள்...

நந்திதா : நந்திதாவின் ஒரிஜினல் பெயர் வேறு. கன்னடத்தில் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதால் படத்தின் கேரக்டர் பெயருடனேயே தமிழில் அட்டக்கத்தியில் அறிமுகமானார். அட்கத்தியை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி என்ற வெற்றியை பிடித்தார் இந்த தெற்றுப்பல் தேவதை. இடம் பொருள் ஏவல், அஞ்சலா உள்பட கைவசம் 5 படங்கள் வைத்திருக்கிறார்.

சஞ்சிதா ஷெட்டி : கன்னடத்தில் ரிச் கேர்ளாக நடித்துக் கொண்டிருந்தவர்தான் சஞ்சிதா ஷெட்டி, தமிழில் தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கச்சி பாப்பாகவும் நடித்திருக்கிறார். கொள்ளைக்காரன் படத்தில் அறிமுகமாகியும், ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்க முடியாதவர், சூதுகவ்வும் படத்திற்கு பிறகு ரசிகர்கள் மனதையும் கவ்விக் கொண்டார். தற்போது கைவசம் 2 படங்கள் இந்த பெங்களூர் பொண்ணுக்கு.

அகிலா கிஷோர் : கல்லூரியில் படிக்கும்போது பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்தவர் அகிலா கிஷோர். படே படே என்ற கன்னடப்படத்தில் அறிமுகமானார். பார்த்திபன், ''கதை திரைக் கதை வசனம் இயக்கம்'' படத்திற்கு ஆர்ட்டிஸ் செலக்ட் பண்ணுகிறார் என்ற கேள்விப்பட்டு மெயிலில் போட்டோக்களை அனுப்ப, பார்த்திபன் ஓகே என்று ரிப்ளை அனுப்ப, சென்னைக்கு பிளைட் பிடித்தார் அகிலா. கொஞ்சம் நயன்தாரா சாயல், தாராள நடிப்புக்கு ஓகே என பாசிட்டிவ் வைப்ரேஷன்கள் இருப்பதால் இப்போது மூன்றாம் உலகப்போர், சமுத்திரகனியின் கிட்ணாவில் வேஷம் கட்டுகிறார்.

ஸ்ருதி ஹரிகரன் : சமீபத்தில் வெளியான நெருங்கி வா முத்தமிடாதா படத்தின் மூலம் லாரி பிடித்து வந்திருக்கிறார் ஸ்ருதி ஹரிகரன். ஏற்கெனவே சில மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் இந்த மைசூர் பெண்ணை அடையாளம் காட்டியது லூசியா. அதன் பிறகு அப்படியே தமிழுக்கு அழைத்து வந்துவிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். நெருங்கி வா.முத்தமிடாதேவில் பெரிய கேரக்டர் இல்லாவிட்டாலும் வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன

தீபா சன்னிதி : ஸ்ருதி ஹரிகரனுக்கும், தீபா சன்னிதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஸ்ருதி கன்னடத்தில் நடித்த லூசியா தமிழில் எனக்குள் ஒருவன் என்ற டைட்டிலில் ரீமேக் ஆகிறது. இதில் ஸ்ருதி நடித்த கேரக்டரில் நடிப்பவர் தீபா சன்னிதி. சாரதி என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். அதன் பிறகும் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். எனக்குள் ஒருவன் தவிர யட்சன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

நிக்கி கல்யாணி : கர்நாடகத்தில் பிறந்து மலையாளத்தில் கால் பதித்தவர் நிக்கி கல்யாணி. 1983 என்ற மலையாள படத்தில் அறிமுகம். தமிழ் படமான பையா கன்னடத்தில் ரீமேக் ஆனபோது தமன்னா மாதிரியே மழையில் நனைந்து ஆடி பாப்புலர் ஆனார். அந்த வேகத்தோடு தமிழுக்கு வந்து விட்டார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் டார்லிங் படத்தின் ஹீரோயின். இதற்கு முன்பே தெலுங்கு, தமிழில் தயாராகும் யாகாவராயினும் படத்தில் ஆதியுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

காவ்யா ஷெட்டி : நம் துனியா கன்னடப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் அப்படியே தமிழில் அவம் படத்தில் அறிமுகம். இப்போது பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ராகினி திவேதி : கன்னடத்தில் 25 படங்களுக்கு மேல் நடித்து விட்ட ராகினி திவேதி, 'நிமர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடிபோட்டு தமிழுக்கு வந்தார். இப்போது கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் அம்மா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த பட்டியலில் வராத பல கன்னடத்து பைங்கிளிகள் தமிழில் நடித்து வருகிறார்கள். அவர்கள் நடித்து வரும் படங்கள் வெளிவரும்போது அவர்களும் இந்த பட்டியிலில் இடம் பிடிப்பார்கள். இன்னும் மூன்று மாதத்திற்கு பிறகு இந்த ஸ்டோரியை எழுதினால் இன்னும் 10 நடிகைகள் இந்த பட்டியலில் இடம்பிடிப்பார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget