கவர்ச்சியில் கலக்கும் மும்பை அழகிகள்

மலையாள இயக்குனர் பத்மராஜிடம் உதவியாளராக இருந்துவிட்டு தற்போது யாரோ ஒருவன் என்ற படத்தை இயக்கி வருகிறார்
கே.என்.பைஜூ. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, இயக்கம், எல்லாமே அவர்தான். ராம், ஆதிரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.இது காட்டுக்குள் நடக்கும் திகில் கதையாம். அதற்காக மும்பையிலிருந்து ஓரியன், சான்ட்ரா என்ற இரு அழகிகளை அழைத்து வந்து அச்சன்கோவில் பகுதி காட்டுக்குள் ஆடவிட்டு படமாக்கி இருக்கிறார் பைஜூ. 

இதுபற்றி அவர் கூறியதாவது: காட்டுக்குள் காணாமல் போன தன் மனைவியை ஒரு துப்பறிவாளருடன் தேடிச் செல்லும் ஹீரோ சந்திக்கும் வித்தியாசமான திகிலூட்டும் சம்பவங்களை கொண்டதுதான் படம். அடர்ந்த காடுகளுக்குள் 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.
காட்டுக்குள் சுற்றுலா வரும் வடநாட்டு பெண்களாக மும்பை அழகிகள் ஓரியன், சாண்ட்ரா நடித்திருக்கிறார்கள். சொகுசாக வாழ்ந்த அவர்கள் காட்டுக்குள் அட்டைகள், யானைகள், கரடிகள் மத்தியில் தைரியத்துடன் நடித்துக் கொடுத்தார்கள் என்கிறார் பைஜூ.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget