திரைப்படத்துறையினராலும் ரசிகர்களாலும், குறிப்பாக ரஜினி ரசிகர்களாலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட லிங்கா படத்தின்
இசைவெளியீட்டு விழா மிகப்பெரிய கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. கன்னடப் படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படம்தான் கடந்த சில மாதங்களாக, ரசிகர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்த வருகிறது. எனவே லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழாவும் எதிர்பார்ப்புக்குரியதாகவே இருந்தது. இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்கிய லிங்கா இசைவெளியீடு நடைபெற்று முடிந்தது.
இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், அமீர், விக்ரமன், சேரன், தயாரிப்பாளர் கேயார், கன்னட நடிகர் சுதீப், மற்றும் லிங்கா படத்தில் பங்களித்த கவிஞர் வைரமுத்து, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உட்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
லிங்கா படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவருடைய பேச்சு வீடியோ பதிவாக ஒளிபரப்பப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு அழைக்காமல் லிங்கா படத்தில் பங்கு பெற்றவர்களும், மேடையில் இருந்த பிரபலங்கள் முன்னிலையில் லிங்கா படத்தின் இசையை ரஜினி வெளியிட்டார்.
பின்னர் பேச வந்தார் ரஜினி. மைக்கைப் பிடித்து அவர் பேசத்தொடங்குவதற்கு முன்னரே ரசிகர்களின் கைதட்டல், விசில், ஆரவாரம் அரங்கத்தை அதிர வைத்தது. “என்னை வாழ வைத்த தெய்வங்களே” என்று பேச்சைத் தொடங்கினார் ரஜினி. அவரது பேச்சில் குறிப்பிட்ட முக்கிய விஷயங்களின் தொகுப்பு...
இந்த விழாவில் பலர் நிறைய விஷயங்கள் பற்றி பேசி விட்டனர். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மீண்டும் நடிக்க முடியுமா? டான்ஸ் ஆட முடியுமா? என்றெல்லாம் சந்தேகம் ஏற்பட்டது. முன்பு மாதிரி நடிக்க முடியாது என்றே நினைத்தேன்.
உடல்நிலை சரியானதும் கோச்சடையான் படத்தில் நடித்தேன். சவுந்தர்யா டைரக்டு செய்தார். அந்த படம் நிறைய அனுபவங்களை அவருக்கு கற்றுக் கொடுத்தது. நான் பணம் சம்பாதிக்கிறேன். அந்த பணத்தை சவுந்தர்யா விரயம் செய்யாமல் இருந்தாலே போதும். ஆனாலும் சினிமாவைப் பற்றி நிறைய விஷயங்களை அந்த படம் சவுந்தர்யாவுக்கு புரிய வைத்தது. கோச்சடையான் படத்தினால் எனக்கு நிறைய நஷ்டம்.
படம் எடுக்கிறது ஈஸிங்க. அரசியலுக்கு போறது ஈஸிங்க. ஆனால் வெற்றி கொடுக்கணுமே... நான் லேட் பண்ணுவேன். ஆனா ஒரு விஷயத்துல இறங்குனும்னு நினைச்சா உடனே இறங்கிடுவேன்". அரசியல் ஆழம், டேஞ்சர் தெரியும். நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை தயங்குகிறேன். நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்கே தெரியல. அப்படி ஏதாவது நடந்தால்... கண்டிப்பா மக்களுக்காக நல்லது பண்ணுவேன்.
இந்தப் படத்தை 6 மாசத்துக்குள்ளே முடிக்கணும்னு நினைச்சேன். அப்படி முடிக்கக் கூடிய ஒரே ஆள் கே.எஸ்.ரவிகுமார்தான். கஷ்டப்பட்டு படத்தை எடுத்தோம். அரங்குகள், சண்டை காட்சிகள், அணைப் பகுதியில் நடந்த படப்பிடிப்புகள், பெரிய டெக்னீஷியன்களை ஒருங்கிணைப்பது, படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவது என நிறைய சிரமங்கள் இருந்தன. அதை எல்லாம் சந்தித்து இந்த படத்தை எடுத்து முடித்துள்ளோம். படப்பிடிப்பில் என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டனர். பாதுகாப்புக்கு நிறைய ஆட்கள் இருந்தார்கள். இந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று புரியவில்லை.
2 வருஷத்துக்கு முன்னால் நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். உடம்புக்கு முடியாமப் போன பிறகு மறுபடியும் எனர்ஜியோடு எழுந்து வந்து இப்படி நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை.
என் ரசிகர்களுக்கு நன்றி. என்றவர், லிங்கா படம் தொடங்கியது முதல் மீடியாக்களுடன் பேசாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் ரஜினி.

கருத்துரையிடுக