லிங்கா படத்தில் ரஜினியின் பன்ச் டயலாக்

ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறுவதை ஒட்டி அந்த பகுதியே
பரபரப்புடன் காணப்படுகிறது.

சத்யம் தியேட்டரின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான லிங்கா படத்தின் ப்ளக்ஸ் பேனர் ரஜினி ரசிகர்களை உற்சாகத்திலும், பொதுமக்களை வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது.

ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் உட்பட லிங்கா படத்தில் நடித்த கலைஞர்களுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, கன்னட நடிகர் சுதீப்பும் ஆகியோரும் லிங்கா விழாவுக்கு வருகை தந்திருக்கிறார்கள். சற்று முன் தொடங்கிய லிங்கா இசைவெளியீட்டு விழாவில், படத்தின் டிரெய்லர் திரையடப்பட்டது. படையப்பா, பாஷ்வை மிஞ்சுகிற அளவுக்கு பட்டையைக்கிளப்புகிற படமாக லிங்கா இருக்கும் என சொல்ல வைக்கிற டிரெய்லராக இருக்கிறது என ரஜினி ரசிகர்கள் புளகாங்கிதப்படுகின்றனர். அட்டாக் பண்ணலாம்னுகு நினைக்காதே...ஹை வோல்ட்டேஜ்..புஸ் ஆயிடுவே என்று சந்தானம் பேசுகிற வசனம் ரஜினி கேரக்டரைப் பற்றிய முன்னோட்டமாக இருக்கிறது. பன்ச் டயலாக் என்றால் அது ரஜினிதான்.

லிங்கா படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக் இனி பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப்போகிறது. வாழ்க்கையில் எதுவுமே ஈஸி இல்லை...முயற்சி பண்ணினா எதுவுமே கஷ்டமில்லை என்று ரஜினி பன்ச் டயலாக் பேசி இருக்கிறார். டிரைலர் மட்டுமின்றி ஓ நண்பா.. நண்பா..., இந்தியனே இரண்டு பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. இரண்டு பாடல்களையும் முழுவதுமாக திரையிடாமல் பாடலின் ஒரு பகுதியை மட்டுமே திரையிட்டனர்.

லிங்கா படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று ரிலீஸ் என்பதை படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உறுதி செய்தார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget