பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் பெரும் வரவேற்பை பெற்றது. ஸ்ரீப்ரியாவும், நிரோஷாவும் காமெடியில்
கலக்கினார்கள். இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சினிமாவில் காமெடியனாக வளர்ந்தார். பல வருடங்களுக்கு பிறகு இதன் சீசன் 2 வருகிற சனிக்கிழமை (நவ 15) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் சின்ன பாப்பாவாக நிரோஷாவே நடிக்கிறார். பெரிய பாப்பாவாக நளினி நடிக்கிறார். மற்ற சீரியல்களில் வில்லியாக நடிக்கும் நளினி இதில் காமெடியாக நடிக்கிறார். சக்திவேல் என்பவர் இயக்குகிறார். சின்ன பாப்பா பெரிய பாப்பாஸ் என்று டைட்டிலில் சின்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.
குடும்ப பின்னணியில் சின்ன பாப்பாவுக்கும் பெரிய பாப்பாவுக்கும் நடக்கும் சின்ன சின்ன மோதல்கள்தான் திரைக்கதை. செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்பாடு பெருகிவிட்ட இந்த காலத்தில் அதற்கேற்ப காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 25 எபிசோட்களுக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார்.

கருத்துரையிடுக