சமந்தா தமிழில் நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றதில்லை என்ற சென்டிமென்ட், 'கத்தி' மூலம் தகர்க்கப்பட்டதில், செல்பி புள்ளைக்கு ரொம்பவே
சந்தோஷம். சமீபத்தில் ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'படங்களின் வெற்றி, தோல்விக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் தான் நான் இருப்பேன். இந்த வகையில், என்னை சுயநலக்காரி என்று கூட கூறலாம். ஒரு படத்தின் வெற்றி, தோல்விக்கு கதை, இயக்குனர், தயாரிப்பாளர்கள் என பல காரணங்கள் உண்டு. எனவே, நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. தோல்வி அடைந்தால், அதற்காக கவலைப்பட மாட்டேன். தோல்வி அடைந்த படங்களில் நன்றாக நடித்திருப்பதாக என்னை யாராவது பாராட்டினால், அதற்காக மகிழ்ச்சி அடைவேன். என் நடிப்பு சரியில்லை என, ரசிகர்கள் கூறினால், அடுத்த நிமிடமே, சினிமாவுக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு செட்டிலாகி விடுவேன்' என கூறியுள்ளார், சமந்தா.

கருத்துரையிடுக