ஸ்மார்ட்போனுக்கு இந்தி மொழியை வடிவமைத்த கூகுள்

கூகுள் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள இந்தி மொழிக்கான கீ போர்டினை, இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் பதிவு
செய்து தர, ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், ஸ்மார்ட் போன்களில், அவற்றைப் பயன்படுத்துபவர் இந்தி மொழியில் தங்களுடைய மின் அஞ்சல்களை எளிதாகவும் விரைவாகவும் தயார் செய்திட முடியும். தாங்கள் மற்றவருக்குத் தெரிவிக்க விரும்பும் செய்திகளையும் டைப் செய்திட முடியும். இப்போது புழக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட் போன்களிலும், சிஸ்டம் அப்டேட் மூலம், இந்த கீ போர்ட் இன்ஸ்டால் செய்திடவும், கூகுள் திட்டமிடுகிறது. 

தற்போது பல மொபைல் போன்களில் இந்தி மொழி சப்போர்ட் தரப்பட்டாலும், பயனாளர், இந்தி மொழியில் தான் விரும்பும் தகவலை டெக்ஸ்ட்டாக அமைப்பதில் சிரமம் கொள்கின்றனர். சுற்றி வளைத்து, பல வழிகளை இதற்கென கையாள வேண்டியுள்ளது. இதனால், இந்தி மொழியில் டெக்ஸ்ட் தருவதனைத் தவிர்த்து விடுகின்றனர். 

இந்தியாவில் இயங்கும் 92 கோடியே 40 லட்சம் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், அடிப்படை வசதிகள் கொண்ட போன்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதனாலும், இணைய இணைப்பில் தகவல்களைப் பெறவும், ஸ்மார்ட் போன்களுக்கு மாறிவருகின்றனர். 

இது போன்ற மாநில மொழிகளுக்கான கீ போர்டுகள், ஸ்மார்ட் போனுக்கு மாறும் பழக்கத்தினை அதிகப்படுத்தும் எனவும் கூகுள் எண்ணுகிறது. தமிழைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் போன்களில், தமிழ் பயன்படுத்த ”செல்லினம்” என்ற சாப்ட்வேர் அப்ளிகேஷன் இலவசமாக கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. டெக்ஸ்ட் அமைப்பதில் முன்கூட்டியே சொற்களைக் காட்டும் வசதி உட்பட பல வசதிகள் இதில் உள்ளன.

இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால், ஆங்கிலம், தமிழ் மொழிகளை மிக எளிதாகக் கையாளலாம். தமிழில் டைப் செய்திட தமிழ்நெட் 99 மற்றும் அஞ்சல் கீ போர்ட்கள் தரப்படுகின்றன. திரையில் காட்டப்படும் கீ போர்ட் மூலம் மிக எளிதாக டைப் செய்திடலாம். ஆப்பிள் நிறு வனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே, ஐ.ஓ.எஸ்.7 முதல் தமிழ் மொழிக்கான சப்போர்ட் வழங்கி வருகிறது. தனியே அப்ளிகேஷன் சாப்ட்வேர் தேவையில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget