குத்து பாட்டில் குஜாலாகும் சுஜா

கதாநாயகியை மையப்படுத்தும் கதைகள் தவிர மற்ற படங்களில் இப்போதைய நடிகைகளெல்லாம் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்றுதான்
பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். கதாநாயகிகளுக்கே இந்த நிலைமை என்றால் கேரக்டர் நடிகைகளின் நிலைமையை கேட்கவே வேண்டாம். ஒரு படத்தில் நான்கைந்து காட்சிகள் அவர்களுக்கு கிடைப்பதே அரிதாகி வருகிறது. இதை புரிந்து கொண்ட சுஜா வாருணி, இப்போது கேரக்டர் ரோல்களில நடிப்பதை விட பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடுவதையே அதிகமாக விரும்புவதாக சொல்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் மீண்டும் கதாநாயகியாக நடிக்கவே எனக்கு விருப்பம். அதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதேசமயம், கேரக்டர்களில் நடிப்பதில் எனக்கு அதிகப்படியான ஈடுபாடு இல்லை. காரணம், என்னதான் முக்கியத்துவமான வேடங்களில் நடித்தாலும், அந்த படங்கள் ஓடினால் மட்டுமே நடிப்பு வெளியே தெரியும். ஆனால் பாடல்கள் என்கிறபோது அதை திரும்பத்திரும்ப டி.வி சேனல்களில் ஒளிபரப்பு செய்வார்கள். அதனால் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு அந்த பாடல்கள் மூலம் நாம் ரசிகர்களுக்கு ரீச்சாகிக்கொண்டேயிருப்போம்.

அதனால்தான், நான் பாடல் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறேன். இப்போது என்னை கேரக்டர்களில் நடிக்க யார் புக் பண்ண வந்தாலும், எனக்கு ஒரு பாடல் காட்சியாவது படத்தில் இருக்க வேண்டும் என்றுதான் எனது கண்டிசனை முன் வைக்கிறேன். அப்படி பாடல் காட்சி இருந்தால் அந்த படத்தில் உடனடியாக கமிட்டாகி விடுகிறேன் என்று கூறும் சுஜா, சந்தர்ப்பம் கிடைத்தால் குத்துப்பாட்டுகளுக்கு நறுக் ஆட்டம் போடவும் நான் தயாராக இருக்கிறேன் என்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget