விண்டோஸ் 10 தொகுப்பு அப்டேட் கோப்புகள்

வழக்கம் போல இரண்டாவது செவ்வாய்க்கிழமை தரும் அப்டேட் திருத்த பைல்களை, நவம்பர் மாதத்திற்கு மைக்ரோசாப்ட் வழங்கியது. இதில்
குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதுவரை கடந்த இரண்டு, 2013, 2014, ஆண்டுகளில், ஒரே நாளில் வெளியான பிழை திருத்தக் குறியீடுகளைக் காட்டிலும், இந்த முறை எண்ணிக்கையில் மிக அதிகம். 16 பாதுகாப்பு சார்ந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. தற்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 10 தொகுப்பிற்கு நான்கு திருத்தங்கள் தரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 79 பிழை திருத்த அறிக்கைகள் தரப்பட்டுள்ளன.

வழக்கம் போல, விண்டோஸ் இயக்க முறைமை, எம்.எஸ். ஆபீஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய அனைத்திற்கும் பிழை திருத்த குறியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐந்து பிழைக் குறியீட்டுத் திருத்தங்கள், தொலைவில் இருந்தே நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து, (Remote Code Execution) கம்ப்யூட்டரைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடிய பிழையான குறியீடுகளைச் சரி செய்வதாகும். ஹேக்கர்களுக்கு, இது போன்ற பிழைக் குறியீடுகள் தான் மிகவும் பிடித்த இடங்கள். நல்ல வேளையாக மைக்ரோசாப்ட் இவற்றைக் கண்டு கொண்டு சரி செய்துள்ளது. அறிக்கை 6, எம்.எஸ். ஆபீஸ் 2007க்கானது. மற்றவை எல்லாம், டாட் நெட் இயக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதாக அமைந்துள்ளன. 

விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், அது எந்த பதிப்பாக இருந்தாலும், இந்த அப்டேட் பைல்களை தரவிறக்கம் செய்து, இயக்கி அமைப்பது நல்லது. கொஞ்ச நேரமே ஆகிறது. நீங்கள், உங்கள் கம்ப்யூட்டரில் ஆட்டோமேடிக் அப்டேட் அமைத்திருந்தால், நீங்கள் எதுவுமே செய்திட வேண்டாம். தானாகவே, அப்டேட் நடந்தேறும். அப்டேட் நடந்து முடிந்தவுடன், கம்ப்யூட்டரை ரீபூட் செய்திட வேண்டியது அவசியம். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget