குறள்சாப்ட் (Kuralsoft) மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், மவுண்ட்வியூ நகரில், இதன் நிறுவனர் கலை
கந்தசாமி அவர்களால் உருவாக்கப்பட்டு, 1999 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கான உள்ளீடு மென்பொருளை வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டு, 'குறள் தமிழ்ச் செயலி' முதல் தொகுப்பு, 2001ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது ஒலியியல் கீ போர்ட் மற்றும் திஸ்கி குறியீடு எழுத்து முறை ஆகிய வசதிகள் மட்டுமே இருந்தன. 2003 ஆம் ஆண்டில், பதிகை 2ல், புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு கீ போர்ட் வசதிகள் இணைக்கப்பட்டு தரப்பட்டது.
2004 ஜனவரியில், குறள் தமிழ்ச் செயலி பதிகை 3 வெளியானது. இதில் திஸ்கி, டாம், டாப், லிபி, பழைய தமிழ் குறியீடுகளும், ஒலியியல், தமிழ்நெட் 99 மற்றும் புதிய, பழைய தமிழ் தட்டச்சு முறை கீ போர்டுகளும் தரப்பட்டன.
2007 ஜூன் மாதத்தில், குறள் தமிழ்ச் செயலி பெரும் அளவில் மாற்றங்களுடன் வெளியானது. இதில் யுனிகோட் குறியீடு கட்டமைப்பு வசதி இணைக்கப்பட்டது. 2014ல் தற்போது, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கங்களில் இயங்கும் வகையில், முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோரிடையே “குறள் தமிழ்ச் செயலி” அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு கீ போர்ட் வசதி, பல தமிழ் மொழி குறியீடு முறை கட்டமைப்புகள் ஆகியவற்றை இது தருவதே இதற்குக் காரணம்.

கருத்துரையிடுக