2014 - டாப் டக்கர் ஹீரோயின்கள்

வழக்கமாக மலையாள தேசம், வடக்கு தேசமான மும்பையிலிருந்துதான் அதிகமான ஹீரோயின்கள் வருவார்கள், இந்த ஆண்டு கொஞ்சம்
வித்தியாசமாக கர்நாடக தேசத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் அறிமுமாகியிருக்கிறார்கள். 100க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் அறிமுகமாகி இருந்தாலும் ரசிகர்கள் மனம் கவர்ந்து, அடுத்த படத்திலும் எதிர்பார்க்க வைக்கும் சில ஹீரோயின்களை டாப் 10 ஆக வரிசைப் படுத்தினால் இப்படித்தான் இருக்கும் அந்த பட்டியல்...

மாளவிகா நாயர்: இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முழு தகுதியை பெற்றவர். நடித்தது என்னோ குக்கூ என்ற ஒரே படம்தான். ஆனால் அதில் ஆயிரம் பரிமாணங்களை காட்டிவிட்டுச் சென்றார். நாம் அன்றாடம் ரெயிலில், ரயில் நிலையங்களில் சந்திக்கும் பார்வையற்ற பெண்ணாக வாழ்ந்து விட்டுச் சென்றார். படிப்புதான் முக்கியம் என்று ஒரு படத்துடன் நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டுச் சென்றாலும். படித்து முடித்து விட்டு வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.

ஆனந்தி: தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிரபு சாலமனின் கண் பட்ட பிறகு இந்த கண்ணழகியை எல்லோருக்கும் பிடித்துப்போனது. பொறியாளன் முதல் படம் என்றாலும் பொறிதட்டியது கயலில். படத்தின் ஸ்டில்களே ஆயிரம் கதைகள் பேசுகிறது. தமிழ் ரசிகர்களை கண்களால் கைது செய்திருக்கிறார் ஆனந்தி.

கேத்திரின் தெரசா: "நீ தான் வேணும்... கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று மெட்ராஸ் படத்தில் கார்த்தியை கேட்கிறபோதெல்லாம் தன்னையே கேட்பதாக நினைத்து புளங்காகிதம் அடைந்து விட்டான் ரசிகன். இனி தெரசா நெக்ஸ்ட் ஸ்டோர் இமேஜ் நடிகை.

சலோனி லுத்ரா: மராட்டிய நாடக நடிகை. அதனால் நடிப்பு ரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது. சரபம் படத்தில் அறிமுகம். முதல் படத்திலேயே டபுள் ஆக்ஷன். ஒரு கேரக்டரில் சிகரெட்டி ஊதி தள்ளினார், போதையை ஏற்றித் தள்ளினார். இன்னொரு கேரக்டரில் அமைதி தழும்பினார். நடிப்பும், துணிச்சலும் பிப்டி பிப்டி கலந்து டெரர் லேடி.

மியா ஜார்ஜ்: மலையாளத்தில் 15 படங்கள் வரை நடித்து விட்டு அமரகாவியத்தில் அறிமுகம். படம் பிடிக்காதவர்களுக்கும் மியாவை பிடித்தது. மியா பேரழகியில்லை. ஆனால் கண்களாலேயே கதை சொல்லிவிடுகிறார். அமரகாவியத்தின் கிளைமாக்சில் அவர் கண்கள் பேசும் கதைகள் ஆயிரம். அதனால் மக்கள் மனசிலும் இடம்பிடித்தார். அடுத்த படமாக இன்று நேற்று நாளையிலும் நாயகியானார்.

அகிலா கிஷோர்: கொஞ்சம் நயன்தாரா சாயல். சராசரிக்கும் கூடுதலான உயரம், எப்படியும் நடிக்க தயார் என்கிற திமிர், இதுதான் அகிலாவின் பிளஸ். பார்த்திபனின் கண்டுபிடிப்பு. பெங்களூரு ஜாங்கிரி. கதை திரைக்கதை வசனம் இயக்கதில் எளிமையான கேரக்டர்தான். ஆனால் படம் ரிலீசான பிறகு அவர் வெளியிட்ட அவரது தனிப்பட்ட போட்டாக்கள்தான் "அவரா இவரு?" என்று கேட்க வைத்தது.

சோனாக்ஷி சின்ஹா: தமிழ் மக்களுக்கு பரீட்சையமான சத்ருஹன் சின்காவின் சீமந்த புத்திரி. நம்ம ஊர் பிரபுதேவாவுக்கு நெருக்கமான தோழி. சூப்பர் ஸ்டார் ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமானவர். இப்படி பல வழிகளில் தமிழ்நாட்டோடு ஒரு டச் இருக்கிறது. முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரோடு நடித்திருக்கிறார். அதுவும் ரவிக்கை அணியாமல் நடித்து ரசிகனின் பிபியை எகிற வைத்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி பூசி மெழுகின மாதிரி இருக்கிறார்.

மோனல் கஜ்ஜார்: கொஞ்சம் ஹன்சிகா சாயலில் வந்திருக்கிறார். வானவராயன் வல்லவராயன், சிகரம்தொடு என இரண்டு படங்களில் அழகு காட்டினார். வெள்ளந்தி சிரிப்பும், வெளுத்த தேகமும், கொஞ்சம் கூடுதல் உயரமுமாக அடுத்த படத்தில் எப்போது பார்க்கலாம் என்று ஏங்க வைக்கிறார்.

இஷாரா: "வாழ்க்கைன்னா எண்ணண்னே அன்பை பிறருக்கு கொடுக்கிறதும், பிறர் அன்பை வாங்கிக்றதும்தாண்ணே" என்று தன்னை கொல்ல வந்தவனிடம் அவர் பேசும் வசனம் ரசிகனை கட்டிப்போட்டது. பெரிய கண்கள், பேசும் முகம் என சதுரங்க வேட்டையில் ரசிகர்களின் மனங்களை வேட்டையாடியவர்.

சுகந்தா ராம்: எதிர்ப்பு அலைகளால் மக்கள் பார்வையிலிருந் விலகிச் சென்று விட்ட சந்தோஷ் சிவனின் இனம் படத்தின் நாயகி. யாதார்த்தமான நடிப்பு, யுத்தத்துக்கு நடுவில் சின்ன காதல், தன் மீது காதல் கொண்ட மனநலம் குன்றிய இளைஞனை பராமரித்தல் என்ற கனமான கேரக்டரை தூக்கிச் சுமந்தார். ஆனால் படம் முடக்கப்பட்டதால். சுகந்தாராமின் திறமையும் யாருக்கும் தெரியாமலே போய்விட்டது.

இவர்கள் தவிர வாணி கபூர் (ஆஹா கல்யாணம்), ஷிவதா (நெடுஞ்சாலை), சமஸ்கிருதி (காடு), அனைகா (காவியத் தலைவன்), ஆகியோரும் தங்கள் நடிப்பால் கவனிக்க வைத்தார்கள். 2015ம் ஆண்டு இவர்களுக்கு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துவோம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget