2014ல் கோலிவுட் டிரைலர் சாதனைகள்

ஒரு திரைப்படத்தின் டிரைலரை வைத்தே படத்திற்கு விளம்பரம் தேடும் வழக்கம் 2014ம் ஆண்டில் ஆரம்பமாகியது. 2013ம் ஆண்டில் 'யூடியூப்'
வீடியோ இணைய தளம் மூலம் டிரைலர்களை ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்க்கும் முறை மெதுவாக வேகமெடுக்க ஆரம்பித்து, அது 2014ம் ஆண்டில் உச்சத்தைத் தொட்டது. இந்த ஆண்டின் துவக்கத்தில் கூட “ஜில்லா, வீரம்” என இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்த போது கூட அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை.

ரஜினிகாந்த் நடித்த மோஷன் கேப்சரிங் படமான 'கோச்சடையான்' படத்தின் டிரைலர் மார்ச் மாதம் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அது லட்சக் கணக்கான ரசிகர்களால் சில நாட்களிலேயே பார்த்து ரசிக்கப்பட்டது. அதன் பின்தான் யூடியூபில் டிரைலர்களின் 'ஹிட்'கள் என்பதைப் பற்றி அதிகமாகப் பேச ஆரம்பித்தார்கள். அடுத்து 'அஞ்சான்' படத்தின் டீசர் இரண்டு நாட்களில் பத்து லட்சம் ஹிட்களைப் பெற்றது என்பதற்காக ஒரு விழாவை நடத்திக் கொண்டாடினார்கள். அதன் பின்தான் 'யூடியூப்' என்பதும் ஒரு 'டிரெண்ட்' ஆக மாறியது.

செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட 'ஐ' படத்தின் டீசர் ஒரே நாளில் 20 லட்சம் பார்வையார்களால் ரசிக்கப்பட்டு புதிய சாதனையைப் புரிந்தது. அடுத்த சில நாட்களில் 'கத்தி' டீசர் வெளியாகி அதுவும் லட்சக் கணக்கில் பார்வையாளர்களை ஈர்த்தது. அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 'கத்தி' படத்தின் பாடல்கள் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற 'யூடியூப் ஹிட்ஸ்' என்பது படத்தின் மார்க்கெட்டிங்கிற்காகவும், விளம்பரத்திற்காகவும் திரைப்படத் தயாரிப்பாளர்களால் முழுவதுமாக பயன்பட ஆரம்பித்தது.

'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் அதை மேலும் நிரூபிக்க வைத்து, ஒரு புதிய சாதனையை படைத்தது. டிசம்பர் மாதத்தின் முதலில் வெளியிடப்பட்ட அப்படத்தின் டீசர் அதிக லைக்குகள் வாங்கிய எண்ணிக்கையில் புதிய சாதனை ஒன்றைப் படைத்தது. தொடர்ந்து விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களது அபிமான நடிகர்களைப் பற்றிய வாக்குவாதங்களில் ஈடுபடவும் காரணமாக அமைந்தது. இன்றைய இணையதள உலகில் அஜித், விஜய் ரசிகர்களை மிஞ்சி வேறு எந்த நடிகர்களின் ரசிகர்களும் இல்லை என்பதை மேற்கண்ட டீசர்கள் நிரூபித்துள்ளன. அதே சமயம் ஷங்கர் போன்ற இயக்குனரின் படைப்புகளுக்கும் அந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ஆதரவு தருவதும் குறிப்பிட வேண்டிய ஒன்றாக உள்ளது. 2015ம் ஆண்டில் யு டியூப் மட்டுமல்லாது இணைய தள உலகமும் ரசிகர்களிடத்திலும், மக்களிடத்திலும் மிகப் பெரும் ஊடகமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget