ஹன்சிகாவை கேலி செய்யும் கோலிவுட் நாயகர்கள்

மும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வரும் நடிகைகளுக்கு தமிழ் பேசுவது என்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அந்த வகையில், கேடி
படத்தில் தமிழுக்கு வந்த மும்பை நடிகையான தமன்னா ஆரம்பத்தில் தமிழ் பேச முடியாமல் ரொம்பவே தடுமாறினார். ஆனால் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் இப்போது இரண்டு மொழியிலுமே பேசத் தொடங்கி விட்டார்.

ஆனால், இன்னொரு மும்பை நடிகையான ஹன்சிகாவுக்கு ஆரம்பத்தில் இருநதே தமிழ் பேசுவது என்பது சிக்கலாகத்தான் இருந்து வருகிறது. 2011ல் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்த அவர், இதுவரை 10 படங்களில் நடித்து விட்டார். தற்போது கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.

இருப்பினும் இன்னமும் தமிழில் ஓரிரு வார்த்தைகூட அவர் பேசுவதில்லை. இதனால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே அவரிடம் சகஜமாக பேசிப்பழகி வருகிறார்கள். இந்த நிலையில், தான் நடிக்கும் படங்களின் தலைப்புகளை அவர் உச்சரிப்பதே வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, விஷாலுடன் நடித்து வரும் ஆம்பள படத்தின் தலைப்பை ஆம்பலா என்றுதான் கூறி வந்தார் ஹன்சிகா.

அதனால் அதை ஹன்சிகாவை அடிக்கடி சொல்ல வைத்து விழுந்து விழுந்து சிரித்து வந்த விஷால், தனது நண்பர்களான ஆர்யா, ஜீவா, விஷ்ணு உள்பட சில நடிகர்களிடம் சொல்ல, ஆளாலுக்கு போன் போட்டு, விஷாலுடன் நடித்து வரும் படத்தின் டைட்டில் என்ன? என்று தெரியாதது போல் அவரிடம் கேட்க, அவர் ஆம்பலா ஆம்பலா என்று சொல்லியிருக்கிறார். இந்த உச்சரிப்பை கேட்டு கிண்டல் செய்த மேற்படி நடிகர்கள், இப்போது விஷாலுக்கும் போன் போட்டு, உங்க ஆம்பலா படம் எப்ப ரிலீஸ் ஆவுது மச்சான் என்று கிண்டலாக கேட்கிறார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget