6 மணி நேரம் குளிக்கும் ஆனந்தி

மைனா, கும்கி படங்களுக்குப்பிறகு பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் கயல். இந்த படத்தில் மைனாவில் அமலாபாலுக்கு, கும்கியில்
யானைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்று கயலாக நடித்திருக்கும் ஆனந்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் பிரபுசாலமன். அதோடு, தனது முந்தின படங்கள் மெகா ஹிட்டாகியிருப்பதால் இந்த படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அதிக பிரமாண்டத்தை இப்படத்தில் புகுத்தியிருக்கிறார் அவர்.

முக்கியமாக சுனாமி சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதால், சுனாமி சுழன்றடிக்கும் காட்சிகளுக்காக கடல் போன்ற ஒரு தொட்டியை உருவாக்கி அதற்குள் தண்ணீரை நிரப்பி அதில் சுனாமியில் சிக்கியவர்கள் சிக்கித்தவிப்பது போன்று படமாக்கியிருக்கிறாராம். அப்போது,, படத்தின் நாயகியான ஆனந்தியைத்தான் தண்ணீருக்குள் வைத்து பல நாட்களாக படமாக்கினாராம்.

அந்த வகையில், சுனாமி காட்சிகளை படமாக்கும்போது ஒவ்வொரு நாளும் சுமார் 6 மணி நேரம் தண்ணீருக்குள்ளேயே நடித்திருககிறார் ஆனந்தி. அப்போது தன்னைச்சுற்றி நிறகும் படக்குழுவினர் எல்லாம் கேமரா லைட்களில் வெப்பத்தினால் வெந்து கொண்டிருக்க இவரோ, குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாராம். அதுமட்டுமன்றி, தொடர்ந்து தண்ணீருக்குள் நடிப்பதால் அவரது உடம்புக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, எந்நேரமும் ஸ்பாட்டில் முதல்உதவி பெட்டியுடன் ஒரு மருத்துவரும் நின்று கொண்டேயிருநதாராம். ஆனால் நல்லவேளையாக ஆனந்திக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லையாம். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget