வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மாஸ் படத்தின் டீசர், பொங்கலன்று வெளியாக உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இதுகுறித்து, டுவிட்டரில் தனது பாலோயர் கேட்ட மாஸ் படத்தின் அடுத்த அப்டேட் புத்தாண்டுக்கா? என்ற கேள்விக்கு, இயக்குனர் வெங்கட்பிரபு, அடுத்த அப்டேட் பொங்கலுக்கு என்று டுவிட்டரில் பதிலளித்துள்ளார். பொங்கலுக்கு, ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன் என பல்வேறு படங்கள் வெளியாக உள்ள நிலையில், மாஸ் படத்தின் டீசரும் அப்போது வெளியாக வாய்ப்புள்ளதாக, வெங்கட்பிரபு சூசகமாக தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக