கம்ப்யூட்டர்களில் தமிழில் டெக்ஸ்ட் அமைக்க பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் கிடைத்தாலும், இந்த வரிசையில் முன்னோடியாக நமக்குக் கிடைத்த
சிலவற்றில் ”குறள் தமிழ்ச் செயலி” முதன்மையானது. அதன் புதிய பதிப்பு 5.0. அண்மையில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சாப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றும் கலை கந்தசாமி பல ஆண்டுகளாகவே தன் அலுவல் தவிர்த்து, பல மென்பொருள் தொகுப்புகளை தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார். அவற்றில், முதன்மையானது ”குறள் தமிழ்ச் செயலி”. இது தவிர, ஆப்பிள் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் பல விளையாட்டுகளையும் (Best Gin Rummy, Best 2048 Game மற்றும் Best Solitaire Game) வழங்கியுள்ளார். இவை பன்னாடெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ் மொழி உள்ளீடுக்கான பயன்பாட்டைப் பொறுத்தவரை, ''குறள் தமிழ்ச் செயலி” மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இது தற்போது சோதனை முறையில் வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 10 சிஸ்டம் உட்பட, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 சிஸ்டங்களில் 32 மற்றும் 64 பிட் சிஸ்டம் என அனைத்திலும், எந்த சிக்கலும் இல்லாமல், இயங்குகிறது. விண்டோஸ் எக்ஸ்பி எனில், அது எஸ்.பி. 3 கோப்புடன் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
குறள் தமிழ்ச் செயலியைப் பயன்படுத்தி, யுனிகோட், திஸ்கி, டாம், டாப், லிபி மற்றும் பழைய தமிழ் எழுத்துக் குறியீடு கட்டமைப்புகள் வழங்கும் தமிழை உள்ளீடு செய்திடலாம். கீ போர்டாக, ஆங்கில பேச்சு வழக்கின் ஒலிக்குறியீடு அடிப்படையிலான ஒலியியல் கீ போர்ட், தமிழ்நெட் 99 கீ போர்ட், புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு கீ போர்ட் ஆகியவற்றைப் பயன்படுத்த வசதிகள் தரப்பட்டுள்ளன. பயன்படுத்துவோருக்கான இடைமுகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தரப்பட்டுள்ளது.
இதனைத் தரவிறக்கம் செய்திட இங்கு செல்லவும். இதற்கான கோப்பினை கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளவும். k50setup.exe என்ற கோப்பு பதியப்படும். இதன் அளவு 2.27 எம்.பி. மட்டுமே. இதற்கு மிகக் குறைந்த நேரமே ஆகும். இந்த பைலுக்கான ஐகானில், கிளிக் செய்தால், உடன் குறள் தமிழ்ச் செயலி பதிவு உங்கள் கம்ப்யூட்டரில் தொடங்கப்படும். இதற்கான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அடுத்து, அடுத்து கிளிக் செய்தால், “குறள் தமிழ்ச் செயலி” பதிவாகும். உங்களுடைய கம்ப்யூட்டர் 32 பிட் இயக்கத்தில் செயல்படுவதாக இருந்தால், 'kural 32' என்ற ஐகான் திரையில் காட்டப்படும். 64 பிட் இயக்கத்தில், 'kural 32' மற்றும் 'kural 64' என்ற இரு ஐகான்கள் இருக்கும்.
குறள் செயலியை இயக்க, விண்டோஸ் 32 பிட் சிஸ்டத்தில், kural 32 என்ற ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் 64 பிட் இயக்கம் எனில், kural 32 மற்றும் kural 64 ஆகிய இரண்டிலும் கிளிக் செய்திட வேண்டும். இப்போது, குறள் தமிழ்ச் செயலி இயக்கத்திற்கான சிறிய விண்டோ கிடைக்கும். இதனைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெறலாம்.
இந்தக் கட்டத்தில் நீங்கள் விரும்பும் குறியீட்டு (என்கோடிங்) முறையைத் (யுனிகோட், திஸ்கி, டேப், டேம், லிபி, பழைய தமிழ்) தேர்ந்தெடுத்து அமைக்கலாம். பின்னர், விசைப்பலகை என்பதற்கு எதிரே, உள்ள கீழ் விரி மெனுவில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் கீ போர்ட் வகையினைத் தேர்ந்தெடுக்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையே, குறள் தமிழ்ச் செயலியின் இயக்கத்தினை மாற்றிக் கொள்ள ஆல்ட்+கே (Alt+K) கீகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த செயல்பாட்டு கட்டத்தினை மினிமைஸ் செய்து சிஸ்டம் ட்ரேயில் வைத்துக் கொள்ளலாம்.
இனி, வேர்ட், வேர்ட்பேட், நோட்பேட் போன்ற விண்டோஸ் சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், அடோப் புரோகிராம்களிலும், தமிழில் நீங்கள் டைப் செய்திடலாம். அத்துடன், பேஸ்புக், கூகுள் டாக், எம்.எஸ்.என்., யாகூ ஆகியவற்றின் சாட் விண்டோக்களிலும் தமிழில் டைப் செய்திடலாம். என்கோடிங் மாற்றிக் கொள்ள விரும்பினால், சிஸ்டம் ட்ரேயில் உள்ள “கு” என்ற ஐகானில் கிளிக் செய்தால், மீண்டும் இதே குறள் செயல்பாட்டிற்கான சிறிய விண்டோ கிடைக்கும். இதில் குறியீடு மற்றும் விசைப்பலகையினை உங்கள் விருப்பப்படி செட் செய்து, பின் Save / மாற்றத்தை சேமி என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அடுத்து குறள் மீண்டும் இயக்கப்படும். இப்போது அதனை மினிமைஸ் செய்துவிட்டு, தேர்ந்தெடுத்த கீ போர்ட் அமைப்பில், குறிப்பிட்ட தமிழ் எழுத்துவகையினைப் பயன்படுத்தி, தமிழில் டெக்ஸ்ட் அமைக்கலாம். குறள் தமிழ்ச் செயலி இயக்கம் தேவை இல்லை என எண்ணினால், அதன் இயக்கத்தை ”நிறுத்துக” என்ற பட்டனை அழுத்தி நிறுத்தலாம்.
“குறள் தமிழ்ச் செயலி” அல்லது வேறு எந்த தமிழ்ச் செயலிகளைப் பயன்படுத்தினாலும், எந்த என்கோடிங் முறையைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதனைச் சார்ந்த எழுத்து வகையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, யுனிகோட் குறியீட்டு முறையினைத் தேர்ந்தெடுத்தால், UniKuraL / Ariel Unicode MS / Latha அல்லது வேறு யுனிகோட் எழுத்துரு ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறே, மற்ற என்கோடிங் முறைக்குமான எழுத்து வகையினை, அந்த என்கோடிங் தேர்ந்தெடுக்கும்போது, அமைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக