பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். இத்தருணங்களில் உடல்
எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை அதிகரிக்க வேண்டும் தான். ஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டும்.
பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின்னர் சற்று எடை அதிகரிப்பார்கள். இது ஒரு இயற்கையான நிகழ்வு. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது அதிகரிக்கும் உடல் எடையானது, பிரசவத்திற்கு பின் குறைவதற்கு சற்று நாட்கள் ஆகும். ஆகவே அப்போது உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருத்தப்படாமல், பொறுமையாக இருந்து, உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால், நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
• பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது, கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
• தாய்ப்பால் கொடுத்தால், பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடையானது குறையும்.
• உடல் எடையை குறைக்க வேண்டுமென்று எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கும் முன், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஏனெனில் பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு சில நாட்கள் ஆகும். எனவே காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற்பயிற்சியின் ஈடுபட்டால், அது வேறு சில விளைவுகளை உடலில் ஏற்படுத்திவிடும். ஆகவே மருத்துவரை ஆலோசித்தப் பின்னரே உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
• பிரசவத்திற்கு பின்னர் உடலானது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சற்று தாமதமாகும். ஆகவே அப்போது பொறுமையுடன் இருந்து, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேலும் அத்துடன் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், யோகாவில் ஈடுபடுவதும் மிகவும் சிறந்தது. இதனால் மனம் ரிலாக்ஸ் அடைவதுடன், உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.

கருத்துரையிடுக