அவை பயனாளர்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன என்பதனை அறிந்து கொள்ளலாம். நம் நடவடிக்கைகளை, நடப்பதைக் கண்டறிந்து சொல்லுதல், இதயத் துடிப்பினை அளந்து காட்டுதல், அன்றாடம் நாம் உட்கொள்ள வேண்டிய உணவினையும், அதன் அளவையும் எடுத்துச் சொல்லுதல் என்ற ரீதியில், பலவகை செயல்பாடுகள் தற்போது புதியதாகத் தோன்றியுள்ளன.
ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் லாக் என்று சென்று கொண்டிருந்த செறிதிறன் சாதனங்கள் வரிசையில், இப்போது தனிநபர் பயன்படுத்தும், ஸ்மார்ட் ப்ரேஸ்லெட், கடிகாரங்கள், கழுத்தில் அணியும் டாலர்கள் என தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன.
மொபைல் போனில் யாரேனும் தொடர்பு கொண்டால், தொடர்பு கொள்பவரைக் காட்டி, தகவல் பரிமாற உதவிடும் வகையில் பிரேஸ்லெட்கள் விற்பனையாகிக் கொண்டுள்ளன. ஏன், நாம் வளர்க்கும் செல்ல நாய்கள் எங்கு செல்கின்றன என்பதைக் காட்ட, அவற்றின் கழுத்தில் அணியும் ஸ்மார்ட் பட்டைகளும் கிடைக்கின்றன. இடத்தைக் கண்டறிவதுடன், நம் செல்லப் பிராணிகள் குறிப்பிட்ட நேரம் தூங்கினவா, குறைந்த அளவு தூரமாவது ஓடினவா என்றும் இதன் மூலம் அறியலாம்.
இவற்றில் உள்ள சென்சார்கள், இவை நடமாடும் வகையைக் கணக்கிட்டு, நம் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களுக்குத் தகவல்களைத் தருகின்றன. நம் உடல் நிலையைக் கணக்கிட்டு தரும் ஆப்பிள் வாட்ச், வரும் ஆண்டில் அறிமுகமாகிக் கலக்கப் போகிறது. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இயங்கும் சென்சார்கள் வடிவமைப்பில் பல புதிய விஷயங்கள் இந்த ஆண்டில் அறிமுகமாயின. மேம்படுத்தலுக்காக அடுத்த ஆண்டுக்குச் செல்கின்றன.
ஸ்மார்ட் போன்களிலும் புதிய வசதிகள் பல அறிமுகப்படுத்தப்பட்டன. மின் அஞ்சல், காலண்டர் மூலம் நாட்களை நினைவூட்டல், இருக்கும் இடத்தினை மற்றவருக்குக் காட்டுதல் போன்ற வசதிகள் தற்போது முன்னேறிய அளவில் கிடைக்கின்றன. 2020 ஆம் ஆண்டுக்குள், நம் தேவைகளுக்கு, நம் கைகளில் உள்ள சாதனங்களிடம் பேசுவோம். அவை நமக்குச் சரியான தீர்வினைப் பதிலாக அளிக்கும். எடுத்துக் காட்டாக, ”பசிக்கிறதே” என்று கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் ப்ரேஸ்லெட்டிடம் கூறினால், அது நாம் ஏற்கனவே, எந்த உணவு விடுதிகளில், என்ன உணவு சாப்பிட்டோம். எதனை விரும்பிச் சாப்பிட்டோம். அவற்றின் விலை என்ன? தற்போதைய விலை என்ன என்பதனை, நம் மொபைல் போன் திரையில் பட்டியலிடும். நாம் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், பணம் எப்படி செலுத்தப் போகிறாய்? என்று கேட்டுவிட்டு, உணவு விடுதிக்குத் தானே ஆர்டர் செய்து, முகவரி தந்து, மொபைல் வாலட் மூலம் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பணத்தையும் செலுத்தும்.
கூகுள் நவ் (Google Now) சாப்ட்வேர், நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் படித்து, நம் பயணம் உறுதியானதை எடுத்துக் காட்டும். விமான நிலையத்திற்கு புறப்பட எது சரியான நேரம் எனச் சொல்லும். இதே வகையில், ஆப்பிள் நிறுவனம் Siri virtual assistant என்ற ஒரு புரோகிராமினைக் கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் Cortana என்ற புரோகிராமினை, விண்டோஸ் இயக்கும் மொபைல் போன்களுக்காக வடிவமைத்துள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வாட்ச் எனப்படும் டிஜிட்டல் வளையங்கள் இப்போது பல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சாம்சங், சோனி, எல்.ஜி., மோட்டாரோலா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன. உடல் நலம் குறித்த தகவல்களை மட்டும் முதலில் இவை பெற்று, நமக்கு அறிவித்தன. இப்போது, இவற்றைப் பயன்படுத்தி மொபைல் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அழைப்புகளைப் பெற்று பேசலாம். மின் அஞ்சல்களைப் படிக்கலாம், அனுப்பலாம். போட்டோக்கள் எடுக்கலாம். ஸ்மார்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களுடன் தொடர்பு கொண்டு இயக்கலாம். டேட்டா பெறுவது என்ற நிலையில் இருந்து, இருக்கும் டேட்டாவினைப் பயன்படுத்துவது என்ற நிலைக்கு, இவை முன்னேற்றம் பெற்றுள்ளன.
வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வந்த பின்னர், முன்பு எப்படி ஐபாட் எம்.பி.3 மியூசிக் அமர்க்களப் பட்டதோ, மக்களிடம் வேகமாகப் பரவியதோ, அதே போல, இதுவும் மக்களிடம் அதிக அளவில் சென்றடையும் என்று எதிர்பார்க்கிறது. மற்ற நிறுவனங்களும், அதனைப் பின்பற்றி, போட்டியில் தங்கள் சாதனங்களையும் சந்தையில் இறக்கலாம்.
எப்போது தகவல் கைகளில் உள்ள வளையங்களுக்குக் கிடைக்கிறதோ, அப்போதே, அவற்றை நம் கண்கள் முன்னால் கொண்டு வரலாம் என்ற சிந்தனை நம் நிறுவனப் பொறியாளர்களிடம் ஓடும். அதன்படி, கூகுள் கிளாஸ் போன்ற சாதனங்கள், இவற்றுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்படும்.
கருத்துரையிடுக