கோலிவுட் புது வரவு நித்யா ஷெட்டி

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில்
நடித்தவர். அவரைத் தொடர்ந்து இப்போது ஐவராட்டம் என்ற படத்துக்காக நித்யா ஷெட்டி என்ற இன்னொரு தெலுங்கு நடிகையும் தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார்.

இவரும் ஸ்ரீதிவ்யாவைப்போலவே சுமார் 30 தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதோடு ஒரு படத்தில நடித்தமைக்காக சிறந்த குழந்தை நடசத்திரத்துக்கான நந்தி விருது பெற்றிருக்கிறாராம். அதனால் தொடர்ந்து படத்துக்குப்படம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விருதுகளை கைப்பற்ற வேண்டும் என்ற கனவுகளுடன் தற்போது கதாநாயகியாக என்ட்ரி கொடுத்திருக்கிறாராம் நித்யா ஷெட்டி.

மேலும்,. ஐவராட்டம் படத்தில் நடிததது பற்றி அவர் கூறும்போது, தமிழில் முதல் படத்திலேயே படம் முழுக்க பாவாடை தாவணி காஸ்டியூம் அணிந்து நடித்திருக்கிறேன். அதேசமயம் என்னை வெறும் டூயட் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தாமல், நான் நடிப்பதற்கு நிறைய காட்சிகள் தந்திருக்கிறார்கள். அதனால் தமிழில் முதல் படமே எனக்கு சவாலாகவே இருந்தது என்று சொல்லும் நித்யா ஷெட்டி, இந்த படத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல காட்சிகளில் நடித்துள்ளாராம். அந்த அளவுக்கு நடிப்பு என்றால் வெறித்தனமாக களமிறங்கி விடுவாராம் அவர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget