அரண்மனை, பூஜை படங்களுக்கு பிறகு ஆண்ட்ரியாவின் கைவசம் 8 படங்கள் உள்ளன. இதில், ஆம்பள, இது நம்ம ஆளு படங்களில் சிறிய
வேடங்களில் நடித்தபோதும், மற்ற படங்களில் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள்தான். அதில் விஸ்வரூபம்-2, உத்தம வில்லன், புதிய திருப்பங்கள், தரமணி, வலியவன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது தனது பெயரும் பரவலாக பேசப்படும் என்று நினைக்கும் ஆண்ட்ரியா, சமீபகாலமாக படபபிடிப்பு தளங்களில் வேலையில் கணணும் கருத்துமாக இருக்கிறாராம். அதாவது, குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்து விடுவது. வெட்டி அரட்டையடிக்காமல் இருப்பது, டைரக்டர் எதிர்பார்த்தபடி ஓரிரு டேக்கிலேயே ஓகே செய்வது என தொழிலில் அதிக ஈடுபாடு காட்டுகிறாராம்.
மேலும், ஸ்பாட்டில் யாரிடமும் அதிகம் பேசாத ஆண்ட்ரியா, மற்றவர்கள் தன்னை மதித்து வந்து பேசினால், அவர்களிடம் மட்டும் சகஜமாக பேசிப்பழகுகிறாராம். முன்பு மாதிரி நடிகர்களை தேடிச்சென்று பழகுவது, கடலை போடுவது என்பதையெல்லாம் சுத்தமாக ஏறக்கட்டி விட்டாராம். ஆண்ட்ரியாவின் இந்த மாற்றம் டைரக்டர்களுக்கு அவர் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி வருவதாக அவருடன் நடிப்பவர்கள் சொல்கிறார்கள்.

கருத்துரையிடுக