கோழைத்தனம் ஆபத்தானது, அது நம் வளர்ச்சியை தடுத்துவிடும் , எனவே எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். நான் எந்த விஷயத்திற்கும்
பயந்தது கிடையாது என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
பெண்களுககு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், அதில் கூறியதாவது, நான் பார்த்த வரையில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று கேட்டால் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிறது என்பேன். அங்கு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே அந்த நகரம் எப்போதும் எனக்கு பிடிக்கும்.
எல்லோரிடமும் நட்புடன் பழகும் குணம் எனக்கு உண்டு. ஆண்கள் மேல் எரிந்து விழ மாட்டேன். யாரிடமும் பகை காட்டவும் மாட்டேன். மரியாதை கொடுப்பேன். ஆனால் என்னிடம் வேறு மாதிரி நடக்க முயன்றால் அவர்களை சும்மா விட மாட்டேன். நான் யார் என்று காட்டுவேன். கோழையாக இருந்தால் நம்பை குட்டிக் கொண்டே இருப்பார்கள். தைரியமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும். எந்த விஷயத்துக்கும் நான் பயந்தது கிடையாது. இந்த குணம் என் அம்மா சரிகாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர் பயந்து நான் பார்த்தது இல்லை. அம்மா மாதிரிதான் நானும் இருக்கிறேன். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

கருத்துரையிடுக