புத்தாண்டில் மெகா பிளாப் படங்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் - அஞ்சான். இப்படம் மிகப்பெரிய
தோல்வியடைந்ததால் கடந்த தீபாவளி அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்தது. இந்தியத் தொலைகாட்சிகளில் முதல்முறையாக என்ற அறைகூவலுடன் அஞ்சான் படம் குறிப்பிட்ட அந்த சேனலில் ஒளிபரப்பாகவிருந்தநிலையில் பதறிப்போனது லிங்குசாமி தரப்பு. அஞ்சான் படத்தின் படுதோல்வியினால் ஏற்கனவே 20 கோடி நஷ்டம் அடைந்திருந்த அவர், தீபாவளிக்கு அஞ்சான் படம் டிவியில் ஒளிபரப்பானால் விநியோகஸ்தர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்று அஞ்சினார்.
உடனே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையிட்டார். இன்னொரு பக்கம் யூடிவி தனஞ்செயனும் தலையிட்டு சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகத்திடம் பேசி, அஞ்சான் படத்தை தீபாவளிக்கு ஒளிபரப்புவதை தடுத்து நிறுத்தினார். அப்போது ஒளிபரப்பாகி இருக்க வேண்டிய அஞ்சான் படம் புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

அதற்கான அறிவிப்பு தற்போது தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன. சூர்யாவுக்கு அஞ்சான் படம்போல், விஜய்க்கு படு தோல்விப்படமாக அமைந்த தலைவா படமும் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த இரண்டு தோல்விப் படங்களோடு இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான தனுஷின் வேலையில்லா பட்டதாரி படமும் பிரபல சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget