பாலிவுட்டை கலக்கும் தனுஷ்

ராஞ்ஜனா படம் மூலம் இந்தியில் கால்பதித்த தனுஷ் தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடித்திருக்கிறார். அனேகன்
படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரை சந்தித்த டைரக்டர் பால்கி இந்த கதையை சொன்னாராம். அதைக்கேட்ட தனுசுக்கு, இந்த மாதிரியான கேரக்டர்கள் இன்றைய தருவாயில் கிடைப்பதே அரிது. அது தன்னை தேடியே வந்திருக்கிறது. இதை தவற விட்டால் பெரிய இழப்பாகி விடும் என்று அனேகன் டைரக்டர் கே.வி.ஆனந்திடம் இதுபற்றி சொல்லியிருக்கிறார்.

அதைக்கேட்ட அவரோ, ஒரு கலைஞனின் மனநிலை இன்னொரு கலைஞனுக்கு புரியாதா என்ன? நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்கிறேன். அந்த படத்துக்கு கால்சீட் கொடுங்கள் என்று அனேகன் படப்பிடிப்பு தேதியை ஷமிதாப் படத்தில் தனுஷ் நடிப்பதற்காக மாற்றிக்கொண்டாராம். அதனால் கே.விஆனந்துக்கு ஒரு பெரிய நன்றி சொல்லி விட்டு ஷமிதாப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வந்த அப்பட வேலைகள் தற்போது முடிவடைந்து அதன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அமிதாப்-தனுஷ் இருவருமே ஒரே மாதிரியான கெட்டப்பில் நின்று போஸ் கொடுப்பதுபோல் வெளியாகியுள்ள அந்த போஸ்டருக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்திருககிறார்களாம்.

முக்கியமாக இப்படத்தை இயக்கியுள்ள பால்கி, இதற்கு முன்பு இந்தியில் அமிதாபச்சனை வைத்து இயக்கிய பா, சீனிகம் ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால், இந்த படத்துக்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு பாலிவுட் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கிறதாம். அதிலும் ராஞ்ஜனாவில் இந்தி ரசிகர்களுக்கு அறிமுகமான தனுஷ், இந்த படத்திற்கு பிறகு இந்தி சினிமாவை கலக்குவார் என்கிறார்கள். அந்த அளவுக்கு பர்பார்மென்சில் அசத்தியிருக்கிறாராம் தனுஷ். ஆக. இந்த படம் முந்தைய படத்தை விட கூடுதலாக ஓடினால, தனுஷின் கவனம் அடுத்து இந்தி பக்கம் அதிகமாக திரும்பி விடும் என்றும் கூறப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget