சிறப்புப் பாடலில் கலக்கும் ஸ்ருதிஹாசன்

இன்றைய முன்னணி நடிகைகள் பலரும் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்கள். பொதுவாக இப்படி இடம் பெறும் பாடல்கள ஐட்டம்
பாடல்கள், ஐட்டம் நம்பர் என்று குறிப்பிடுவதுதான் வழக்கம். ஆனால், இப்படிப்பட்ட பாடல்களை ஐட்டம் என்று குறிப்பிடுவதை ஸ்ருதிஹாசன் தவிர்க்க வேண்டும் என்கிறார். தமிழில் இப்படிப்பட்ட பாடல்களில் அவர் ஆடவில்லை என்றாலும், தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஆகாடு என்ற படத்தில் ஒரு பாடலுக்கும், தற்போது தீவர் ஹிந்திப் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ஆகாடு படத்தில் ஸ்ருதிஹாசன் போட்ட ஆட்டத்தை தெலுங்கு மீடியாக்கள் புகழ்ந்து தள்ளின. தீவர் படத்திலும் ஸ்ருதிஹாசன் ஆடிய நடனம் வெகுவாகப் பேசப்படும் என்று ஹிந்தி மீடியாக்கள் இப்போதே எழுத ஆரம்பித்து விட்டன.

ஒரு படத்தில் நடித்தால் வாங்கும் சம்பளத்தை விட ஒரு பாடலுக்கு நடனமாடும் போது ஏறக்குறைய அதே அளவு சம்பளம் கிடைப்பதால் ஸ்ருதிஹாசன் அப்படிப்பட்ட பாடலுக்கு நடனமாடுகிறார் என்று சொல்கிறார்கள். ஐட்டம் பாடல்கள் என ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது அது அவ்வளவு தவறாக எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால், தமிழில் அதைக் கொஞ்சம் தவறாகவே குறிப்பிடுவார்கள். ஒருவேளை, அதனால்தானோ என்னவோ, ஸ்ருதிஹாசன் அப்படிப்பட்ட பாடல்களை ஸ்பெஷல் சாங், சிறப்புப் பாடல் என அழைக்கச் சொல்கிறார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget