ரஜினிகாந்த் குடும்பமும் ஒரு திரைக்குடும்பம் தான். அவர் ஒரு சூப்பர் ஸ்டார், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு பின்னணிப் பாடகி,
மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷ் ஒரு இயக்குனர், மூத்த மருமகன் தனுஷ் ஒரு நடிகர், இளைய மகள் செளந்தர்யா அஸ்வின் ஒரு இயக்குனர் என தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படும் குடும்பமாக விளங்கி வருகிறது. ரஜினிகாந்தின் மருமகனாக தனுஷ் இருந்தாலும் இன்று வரை அவர் தன்னை ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகவே காட்டிக் கொண்டு வருகிறார். 'லிங்கா' படம் வெளிவந்த போது கூட முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து விட்டு ஆரவாரமான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அந்த அளவிற்கு ரஜினிகாந்த் மீது ரசிகராக அபிமானம் வைத்துள்ள தனுஷ் தற்போது ரஜினிகாந்தையே 'ஓவர் டேக்' செய்து விடுவார் போலிருக்கிறது. திரையுலகத்தில் ரஜினியின் பல சாதனைகளைமுறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், நாம் சொல்ல வருவது, டிவிட்டர் தொடர்பாளர்களின் எண்ணிக்கைச் சாதனை. ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தான் டிவிட்டரில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்தார். நேற்று இரவு வரை அவரை 1.21 மில்லியன் பேர் தொடர்ந்து வருகிறார்கள். தனுஷ் 2010ம் ஆண்டில் டிவிட்டர் கணக்கை ஆரம்பித்திருக்கிறார். அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நேற்று இரவு வரை 1.21 மில்லியனாக உள்ளது.
ரஜினிகாந்த் இதுவரை வெறும் 11 டிவீட்டுகள் மட்டும் போட்டிருக்க, தனுஷோ 2,811 டிவீட்டுகள் வரை போட்டிருக்கிறார். இவை நேற்றிரவு வரையிலான கணக்கு. தனுஷ் நடித்து விரைவில் தமிழில் 'அனேகன்', ஹிந்தியில் 'ஷமிதாப்' ஆகிய படங்கள் வெளிவர உள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்குள்ளேயே ரஜினிகாந்தைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை தனுஷ் கண்டிப்பாக 'ஓவர் டேக்' செய்து விடுவார் என்பது மட்டும் உறுதி.

கருத்துரையிடுக