பாம்பு சட்டை கதை விமர்சனம்

பாபி சிம்ஹா சோலோ ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் பாம்பு சட்டை. ஷங்கர் உதவியாளர் ஆடம் தாசன் இயக்குகிறார். அஜீஸ்
அசோக் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து, மதன்கார்க்கி, விவேகா பாடல்களை எழுதுகிறார்கள். ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள். ஹீரோயின் இல்லாமலேயே முதல்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டது.

"வாழ்வதற்கு கொஞ்சம் பணம் தேவைதான். ஆனால் இங்கு பலர் பணத்துக்காகவே வாழ்கிறார்கள். பணத்துக்காக பாம்பு தன் சட்டையை அடிக்கடி உரித்துக் கொள்கிற மாதிரி மனிதர்கள் பணத்துக்காக தங்கள் சுயம், கவுரவத்தை உரித்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவனின் வாழ்வும் முடிவும்தான் கதை" என்கிறார் ஆடம் தாசன். மக்களை ஏமாற்றி பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் ஒருவன் கடைசியில் பணத்தை விட அன்பும், பரிவும், பாசமும்தான் உயர்ந்தது என்பதை உணர்கிற கதையாக அது இருந்தது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget