த்ரிஷா திரையுலக ரகசியம்

இந்தக் காலத்தில் ஒரு நடிகை 12 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக இருப்பது சாதாரண விஷயமில்லை. இந்த 13வது ஆண்டிலும் த்ரிஷா,
அஜித்துடன் 'என்னை அறிந்தால்' தமிழ்ப் படத்திலும், தெலுங்கில் அதிரடி ஹீரோவான பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தன்னுடைய 12வது ஆண்டில்தான் த்ரிஷா, 'பவர்' படம் மூலம் கன்னடப் பட உலகில் அறிமுகமானார். அவர் நடித்துள்ள 'பூலோகம்' படம் சில மாதங்களுக்கு முன்பே வர வேண்டியது, இன்னும் வராமல் இருக்கிறது. ஆக, இப்போதைக்கு த்ரிஷாவின் 13வது ஆண்டுத் திரையுலகில் இரண்டு தமிழ்ப் படங்களும், ஒரு தெலுங்குப் படமும் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு உள்ளது.

பிரசாந்த், சிம்ரன் நடித்த 'ஜோடி' படத்தில் 'ரிச் கேர்ள்' ஆக வந்து போன த்ரிஷா, அதன் பின் டிசம்பர் 13, 2002ல் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பின் பல தமிழ்ப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் “சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம், அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா” ஆகிய படங்கள் மிக முக்கியமான படங்கள் எனச் சொல்லலாம். த்ரிஷா தற்போது வட இந்திய சுற்றுப் பயணத்தில் அவருடைய மனம் கவர்ந்தவருடன் சுற்றுலாவில் இருப்பதாகத் தெரிகிறது. 'பவர்' கன்னடப் படத்தின் 100வது நாள் விழா, நேற்று பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. அதில் கூட த்ரிஷா கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டிற்குக் கூட அவர் வராதது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

13வது ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து திரையுலகத்தில் தொடர்வாரா, அல்லது திருமணம் செய்து கொள்வாரா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்...
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget