பொங்கல் போட்டியில் கொம்பன்

கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்த கத்தியும், விஷால் நடித்த பூஜையும் மட்டுமே வெளிவந்தது. ஆனால் வருகிற பொங்கல் அன்றுதான் அனல்
பறக்க இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படம் பொங்கல் ரிலீஸ் என்று ஆஸ்கர் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. 150 கோடியில் தயாராகி உள்ள இந்தப் படத்தை தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் 500 தியேட்டர்களில் வெளியிட அந்த நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த அஜீத் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படமும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. விஷால் நடிக்கும் ஆம்பள படம் பொங்கல் ரிலீஸ் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடிப்பில் முத்தையா இயக்கும் கொம்பன் படமும் பொங்கலில் வெளிவர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் நடிக்கும் உத்தவில்லன் படமும் பொங்கலுக்கு ரிலீசாகலாம் என்கிறார்கள். ஆனால் முறைப்படியான அறிவிப்பு வெளியாகவில்லை.

இன்றைய நிலவரப்படி ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 1200 தியேட்டர்களில் புதுப்படங்களை வெளியிடும் சக்தியுள்ள தியேட்டர்கள் சுமார் 900 தான். ஐ படம் 400 தியேட்டர்கள், என்னை அறிந்தால் 400 தியேட்டர்கள் என்று வைத்துக் கொண்டால் மீதமுள்ள 100 தியேட்டர்கள் ஆம்பளைக்கும், கொம்பனுக்கும் எப்படி போதுமானதாக இருக்கும்.

ஐ படத்தை தயாரித்துள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், என்னை அறிந்தால் படத்தை தயாரிக்கும் ஏம்.எம்.ரத்னம், கொம்பன் படத்தை தயாரிக்கும் ஞானவேல்ராஜா, ஆம்பள படத்தை தயாரிக்கும் விஷால் நான்குபேருமே சக்தி வாய்ந்த தயாரிப்பாளர்கள். விஷால் தவிர மற்ற மூன்று பேருக்கும் வழக்கமான தியேட்டர்களே நிறைய இருக்கிறது. தியேட்டர்காரர்களுக்கு என்னை அறிந்தாலும், அடுத்து ஐ படத்தையும் திரையிடவே ஆர்வம் இருக்கிறது. இந்த நிலையில் தியேட்டர்களை பிடிக்கும் போட்டா போட்டி இப்போதே தொடங்கிவிட்டது.

"கடைசி நிமிடத்தில் வேறு ஏதாவது காரணம் சொல்லி ஏதாவது ஒரு படம் தள்ளிப்போகலாம். இல்லாவிட்டால் எல்லா படங்களுமே குறைந்த தியேட்டர்களில்தான் வெளியாகும். நான்கு நாட்களில் திருட்டு விசிடி வந்துவிடும் இது நான்கு படத்துக்குமே பிரச்சினைதான்" என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget