இலியானா ஹாட் கமெண்ட் பாலிவுட்டில் பரபரப்பு

'நண்பன்' படத்தின் நாயகியான இலியானா, தற்போது இந்திப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் இரண்டே இரண்டு
படங்களிலும், தெலுங்கில் சில வெற்றிப் படங்களிலும் நடித்தவர், இந்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து பாலிவுட்டிலேயே தங்கி விட்டார். இந்தியில் நடிக்க ஆரம்பித்த பிறகு நடிகைகளிடம் பல மாற்றங்கள் வருவது சாதாரண விஷயம்தான். அவர்களுடைய உடை விஷயத்திலிருந்து, பேசுவது வரை எல்லாமே மும்பை கலாச்சாரத்திலேயே இருக்கும். நடிகைகளைப் பற்றி மும்பை மீடியாக்கள் வரம்பு மீறிக் கூட செய்திகளை வெளியிடுவது வழக்கம்தான். அவர்களுக்குத் தீனி போடும் வகையிலும் எதையாவது பேசினால் தான் மும்பை மீடியாக்கள் கண்டு கொள்வார்கள்.
அதற்கேற்ற விதத்தில் நேற்று ஒரு விவகாரமான கொஞ்சம் ஆபாசமான ஒரு பதிவை தன்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் ஷேர் செய்திருக்கிறார் இலியானா. அதில் இருப்பது என்னவென்றால், “எங்களது பிராவை, ஷர்ட் கை வழியாகக் கழற்றி அதை அறைக்குள் வீசுவதில் இருக்கும் மகிழ்ச்சியை ஆண்கள் எப்போதுமே அறிந்து கொள்வதில்லை,” என ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார். இலியானா எதற்காக இதைப் பதிவிட்டார் என்பது தெரியவில்லை. இலியானாவின் இந்த பதிவுதான் நேற்றிலிருந்து பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget