கனகா ரேஞ்சுக்கு ஆடுவாரா வரலட்சுமி

ஷ்...அப்பாடா! ஒருவழியாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. பரதேசி படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் தாரை
தப்பட்டை படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி பல மாதங்களாகிவிட்டநிலையில் படத்தின் படப்பிடிப்பு மட்டும் காலதாமதமாகிக் கொண்டே இருந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை என்றும், சசிகுமாருக்கு நாதஸ்வரம் வாசிக்கும் பயிற்சியும், வரலட்சுமிக்கு கரகாட்டம் ஆட பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு டெஸ்ட் ஷூட் எடுத்து பார்த்து விட்டு அதன் பிறகே படப்பிடிப்பை துவக்க பாலா திட்டமிட்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இன்னொரு தரப்பினரோ, சேது படம் வெளியானது டிசம்பரில்தான். அதனால் பாலாவுக்கு டிசம்பர் மாதம் மீது சென்ட்டிமெண்ட் உண்டு. எனவே தாரை தப்பட்டை படத்தை டிசம்பர் மாதம்தான் தொடங்குவார் என்று சொல்லி வந்தனர்.

இந்த கூற்றை உண்மையாக்குவதுபோல் சில தினங்களுக்கு முன் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கியது. கரகாட்டம் மற்றும் நாதஸ்வரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் நடிப்பது குறித்து நான் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாலா சாரின் தாரை தப்பட்டை படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டது. பாலா சார் இயக்கத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று வரலட்சுமி ட்வீட் செய்துள்ளார்.

தாரை தப்பட்டை படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget