நடிப்பில் ஹாலிவுட் நடிகரை மிஞ்சிய விக்ரம்

ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பாலே, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும், அதற்கும் பொருத்தமாக தனது உடற்கட்டை
மாற்றிக்கொண்டே இருப்பார். 2002ம் ஆண்டு வெளிவந்த ரெயஜின் ஆஃப் பயர் படத்தில் 83 கிலோ உடல் எடையாக இருந்த பாலே, 2004ம் ஆண்டில் நடித்த தி மெசினிஸ்ட் படத்தில், உடல் எடையை 55 ஆக குறைத்தார். அதற்கடுத்த ஆண்டிலேயே, பேட்மேன் பிகின்ஸ் படத்திற்காக, உடல் எடையை 86 கிலோவாக அதிகப்படுத்தினார். அதேபோல், 2010ம ஆண்டில், தி ஃபைட்டர் படத்திற்காக, உடல் எடையை 66 கிலோவாக குறைத்திருந்த பாலே, 2012ம் ஆண்டி்ல, தி டார்க் க்நைட் ரைசஸ் படத்திற்காக, உடல் எடையை 90 கிலோவாக உயர்த்தினார். நடிப்பிற்காக, தன் உடலை வருத்திக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவராக இருந்த கிறிஸ்டியன் பாலேவை, ஒரே படத்தி்ல முந்திவிட்டார் தமிழ் நடிகர் சீயான் விக்ரம்.

விரைவில் வெளிவர உள்ள "ஐ" படத்திற்காக, பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ள விக்ரம், தற்போது தனது அடுத்த படத்திற்காக, உடலை மிகவும் வருத்தி, பார்ப்பவர்களால், இவர் விக்ரம் தானா? என்பது கூட அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இணையத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில், பாடி பில்டர் போன்ற உடற்கட்டு கொண்ட விக்ரம், அடுத்த படத்தில், நோயாளி போன்று காட்சி தருகிறார்.

நடிப்பு அர்ப்பணிப்பில், ஒரு படத்திலேயே, ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பாலேவை, சீயான் விக்ரம் முந்தியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget