இது நம்ம ஆளு

சிம்புவின் 'சிம்பு சினி ஆர்ட்ஸ்' நிறுவனமும், இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, சிம்பு நயன்தாரா
நடிப்பில், பாண்டிராஜ் இயக்கும் இது நம்ம ஆளு படம் ட்ராப்பாகிவிட்டது என்ற படத்துறையில் சர்வ சாதாரணமாக பேசப்பட்டு வருகிறது. பாண்டிராஜ் தரப்பில் விசாரித்தால், யார் சொன்னது இது நம்ம ஆளு அடுத்த மாசம் ரிலீஸ் என்று கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிம்புவின் கையில் புதிய படமில்லை, நயன்தாராவோ விஜய்சேதுபதி உடன் நானும் ரௌடிதான் படப்பிடிப்பில் இருக்கிறார். சிம்பு எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. பாண்டிராஜோ சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் வைத்து இது நம்ம ஆளு படம் வருமா, வராதா எனும் பேச்சு மீண்டும் தொடங்கிவிட்டது.

''இது நம்ம ஆளு' படத்தின் டாக்கி போர்ஷன் படப்பிடிப்பு முடிந்துவிட்டு, அதன் எடிட்டிங், டப்பிங், கலர் கரெக்ஷன் போன்ற வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது. ஓரிரு பாடல்களின் படப்பிடிப்பு மட்டும் தான் பாக்கி. அதையும் விரைவில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ் என்று வழக்கம்போல் பதில் சொல்கிறார்கள் பாண்டிராஜ் தரப்பினர். இது நம்ம ஆளு படத்தின் தயாரிப்பில் 'சிம்பு சினி ஆர்ட்ஸ்' நிறுவனம் பங்குதாரராக இருப்பதால் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் விநியோகஸ்தர்களிடம் படத்தை விற்க 'படம் காட்டி' வருகிறார். ஒருத்தரும் இத நம்ம ஆளை நம்பி பைசா தரவில்லை என்பதே தற்போதைய நிலவரம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget