கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஐ படத்தின் டிரைய்லர் யூ டியூப் மூலம் லட்சக்கணக்கான மக்களை எட்டி உள்ளது.
உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டிரைய்லர் என்ற இடத்தை பிடித்து விடும் என்கிறார்கள்.
டிரைலர் பற்றிய ஒரு ரிவியூ : விக்ரமின் ஸ்டைலான தோற்றங்களுடன் தொடங்குகிறது இரண்டு நிமிட டிரைய்லர். அடுத்து ஒரு அழகாக காதல் பகுதி. பூக்களும், பசுமையும் நிறைந்த அழகான ஒரு இடத்தில் ஆனந்தமாக இருக்கிறார்கள் விக்ரமும் எமியும். இது எந்த இடம் என்று கேட்கிறார் விக்ரம். அதற்கு எமி "வயசான காலத்துல இங்க செட்டிலாகலாம். இங்க யாரும் வரமாட்டாங்க. நீயும் நானும் மட்டும்தான்... காலம்பூரா இங்கேயே கைகோர்த்து நடக்கலாம்" என்கிறார். இந்த காட்சி எமிக்கும் விக்ரமிற்குமான காதலை அழுத்தமாக சொல்கிறது.
அடுத்து காட்சியில் அகோரமான விக்ரம் நடந்து வருகிறார். அதைக் கண்டதும் எமி அலறுகிறார். காதல் எந்த நிலைக்கு வந்திருக்கிறது என்பதை இந்த காட்சி காட்டுகிறது. இரண்டுக்கும் இடையில் நடந்தது என்ன என்பது அடுத்ததடுத்த காட்சிகளில் விரிகிறது.
பறந்து வரும் ஒரு சைக்கிளை விக்ரம் அநாயசமாக பிடிக்கிறார். ஓடும் நதியில் ஓடுகிறார், ரெயிலின் மேல் ஆக்ரோஷமாக சண்டையிடுகிறார், பாடி பில்டர்களோடு மோதுகிறார், சீனாவில் மொட்டை மாடியில் சண்டைபோடுகிறார். கத்தியுடன் வரும் சீனர்களை எதிர்த்து நிற்கிறார்.
அடுத்த ராட்சத உருவமெடுத்து உறுமுகிறார். அந்த உருவத்துடன் எமியுடன் ஆடுகிறார். மீண்டும் அகோர விக்ரம் வருகிறார். அவர் எமியை சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார் "யார் நீ உனக்கு என்ன வேணும்?" என்று கேட்கிறார் எமி. நிலவைதேடி.காம் தீப்பெட்டியை எடுத்து நெருப்பை கொளுத்த போகிறார் விக்ரம். "என்னை கொல்லப்போறியா?" என்று கேட்கிறார் எமி. "அதுக்கும் மேல..." என்கிறார் விக்ரம்.
அழகான ஒரு காதலை ஏதோ ஒன்று பிரித்து விக்ரமை விகாரமாக்கி விடுகிறது. ஆனாலும் விக்ரமின் மனதிற்குள் இருக்கும் காதல் கடைசி வரை அழகாகவே இருக்கிறது. விகாரமானவர் விக்ரமாகவே இருந்தாலும் எமி ஏற்றுக் கொள்கிறாரா? விக்ரம் ஏன் அப்படி ஆனார் என்பதற்கான பதிலை திரையில் பாருங்கள் என்கிறது டிரைய்லர். ஒவ்வொரு காட்சியிலும் ஷங்கரின் பிராண்ட் பிரமாண்டம் தெரிகிறது.

கருத்துரையிடுக