சன்னியின் சல்மான் கனவு

சல்மான் கான் உடன் ஜோடி சேருவதே எனது கனவு என்கிறார் நடிகை சன்னி லியோன். பாலிவுட்டின் பிரபல ஹாட் நடிகை சன்னி
லியோன், தனது அதிரடி கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து கொண்டிருக்கிறார். கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர் இவர் தான். பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் எல்லாம் சன்னி லியோனுக்கு அடுத்து தான் இருக்கின்றனர். அந்தளவுக்கு இவர் பிரபலம்.

இந்நிலையில் இது குறித்து சன்னி லியோன் கூறியுள்ளதாவது, நான் இந்தளவுக்கு பிரபலமாகி இருக்கிறேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி குறித்து சன்னி கூறுகையில், நாட்டை இன்னும் முன்னேற்ற பாதைக்கு மோடி அவர்கள் அழைத்து செல்ல வேண்டும். அதற்கு என் வாழ்த்துக்கள். வெளிநாட்டவர்கள் எல்லாம், என் கணவர் உட்பட... இந்தியாவில் தொழில் துவங்க எளிமைப்படுத்தி கொடுத்தற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

சல்மான் கான் பற்றி கூறுகையில், சல்மானால் தான் நான் இங்கு இந்தளவுக்கு வளர்ந்துள்ளேன். அவரது பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் தான் பிரபலமானேன். பிக்பாஸ்-5 நிகழ்ச்சியின் கடைசிநாளில் சல்மான் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரது வாழ்த்து என்னை இந்தளவு முன்னேற வைத்திருக்கிறது. அந்தவகையில் நான் ஒரு அதிர்ஷ்டசாலி. ஒருநாள் கண்டிப்பாக சல்மான் கான் உடன் ஒரு படத்திலாவது நான் ஜோடிசேருவேன். அது தான் எனது கனவு என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget