அக்லி சினிமா விமர்சனம்

நடிகர் : ராகுல் பட்
நடிகை : தேஜஸ்வினி கோல்ஹாபூர்
இயக்குநர் : அனுராக் காஷ்யப்
தயாரிப்பு : டார் மோஷன் பிக்சர்ஸ் & பான்டோம் பிலிம்ஸ்


2013ம் ஆண்டின் முற்பகுதியிலேயே உருவாகி, அந்தாண்டிலேயே வெளிவர வேண்டிய படம். சில காரணங்களால், 2014ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்துள்ளது. இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த ஆண்டின் கடைசி படம் அக்லி

நடிப்புத்துறையில் முன்னணி இடத்தை அடைய வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்து வருபவர் ராகுல் (ராகுல் பட்). நடிப்புத்துறையின் மீதுள்ள ஈடுபாட்டால், மனைவி ஷாலினியிடம் (தேஜஸ்வினி கோல்ஹாபூர்) ராகுலால் அன்புகாட்ட முடியவில்லை. இதனையே காரணமாக கொண்டு, ராகுலை பிரிகிறார் ஷாலினி. மகள் காளி(அனிஷிகா ஸ்ரீவத்சவா) யோ, விவாகரத்து ஒப்பந்த அடிப்படையின்படி, ராகுலிடம் இருக்கிறார். இந்நிலையில், ஷாலினி, போலிஸ் உயர் அதிகாரி போஸ் செளமிக்கை (ரோனித் ராய்), இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். இதனிடையே, போஸ் செளமிக்கிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஷாலினி, போஸ் செளமிக்கின் துப்பாக்கியை எடுத்து. ஷாலினி, மகள் காளியின் முன்னிலையில் தற்கொலை செய்து கொள்கிறாள். குழந்தை காளிக்கு, ஷாலினியின் செயல்பாடு புரியாததால், அவள் அதை தடுக்கவும் இல்லை. இந்நிலையில், ஒரு சனிக்கிழமை அன்று, காளி, தந்தை ராகுலுடன் காரில் ஷாப்பிங் சென்றிருந்தார். அப்போது, ராகுல் தொடர்ந்து போன் கால்கள் வந்துகொண்டிருந்ததால், ராகுல் அதிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். போனில் பேசியபடி, சிறிதுதூரம் நடந்து சென்று திரும்பி வந்து பார்க்கும்போது, காரில் காளி இல்லை. போலீசில் புகார் செய்தார் ராகுல். காளி தனது காதலி ஷாலினியின் குழந்தை என்பதை அறியாத போஸ் செளமிக், ராகுலின் புகாரை சட்டை செய்யவில்லை. பின் விபரம் தெரிந்தபின், காளியை ராகுல் தான் கடத்திவைத்து நாடகமாடுகிறான் என்று லோக்கல் போலீஸ் ஜாதவ், ராகுல் மற்றும் அவரது நண்பர் சைதன்யாவை நையப்புடைக்கிறான். இதன்பின், ராகுல் மறறும் போஸ், காளியை தேடுவதை விறுவிறுப்பாக காட்டுவதே படத்தின் மீதிக்கதை....

கதை நன்றாக இருந்தபோதிலும், திரைக்கதை சிறப்பாக இல்லாததால், படம், பார்வையாளர்களிடம் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. படத்தில் வரும் சீன்களை, ஆடியன்ஸ் முன்பே கணித்துவிடுவதால், பெரும்பாலான இடத்தில் படம் போரடித்து விடுகிறது. எடிட்டிங் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எல்லா காட்சிகளையும் இருட்டிலே எடுத்திருப்பதால், படத்தொகுப்பு இல்லையோ என்று பார்ப்பவர்களை நினைக்க வைத்து விடுகிறது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக இல்லை. வசனங்கள் சிறப்பாக உள்ளன. கலை மற்றும் காஸ்டியூம், பார்ப்பவர்களின் கண்களை உறுத்த மட்டுமே செய்கிறது. இயக்குநர் அனுராக் காஷ்யப், மேலும் சிறப்பாக பணியாற்றியிருந்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தால், சிட்டி ரசிகர்களையாவது படம் கவர்ந்திருக்கும்....
ரோனித் ராய், தேஜஸ்வினி கோல்ஹாபூர், வினீத் சிங் மற்றும் சுர்வீன் சாவ்லா உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களை அறிந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

நடிகர்களின் சிறப்பான நடிப்பிற்காக, படத்தை ஒருமுறை பார்க்கலாம்....
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget