சென்ற மார்ச் மாதம் 20 கோடி பயனாளர்களைக் கொண்டிருந்த இன்ஸ்டாகிராம், தற்போது 30 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி
வருகிறது. சென்ற ஏப்ரல் தொடக்கம் முதல், ஒன்பது மாதங்களில் இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50% உயர்ந்துள்ளது. இதன் மூலம் 28.4 கோடி பயனாளர்களைக் கொண்ட ட்விட்டர் தளத்தைக் காட்டிலும், கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கொண்டதாக, இன்ஸ்டாகிராம் இடம் பெற்றுள்ளது. மக்கள் இந்த அளவிற்கு நட்புகளை உருவாக்கித் தங்களிடையே தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக இன்ஸ்டாகிராம் தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் தன் வாடிக்கையாளர்களுக்கெனப் பல புதிய வசதிகளை அமைத்து வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக