கோலிவுட் மாஸ் நடிகை எமி ஜாக்சன்

ஐ படத்திற்கு பிறகு எமி ஜாக்சனுக்கு வாய்ப்புகள் குவிகிறது. ஆனால் அவர்தான் அடிக்கடி லண்டனுக்கு பறந்து சென்று வாய்ப்புகளை தவற
விடுகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திற்கு எமியை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் படப்பிடிப்பு தினத்தன்று அவர் லண்டனில் இருக்க இவர் சரிப்பட மாட்டார் என்று கழற்றி விட்டுவிட்டார்கள்.

ஐ படத்திற்கு பிறகு எமியின் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்பிருப்பதால் பலரும் இப்போதே அவரை ஒப்பந்தம் செய்து கொள்ள போட்டியிடுகிறார்கள். எமி கதைகூட கேட்பதில்லையம். அவருடைய கேரக்டர் என்ன? எத்தனை நாள் கால்ஷீட்? எவ்வளவு சம்பளம்? இதுதான் இப்போதைக்கு அவரது கேள்வி. படப்பிடிப்பின்போது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்பது தனி நிபந்தனை.

இப்போது எமியின் சம்பளம் 50 லட்சத்திலுந்து 75 லட்சம் வரை என்கிறார்கள். ஐ படத்திற்கு பிறகு ஒரு கோடியை தாண்டலாம், தெலுங்கு, இந்தியில் பிசியாகிவிடலாம் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டியிருக்கிறது. இந்தப் போட்டியில் இப்போது ஜெயித்திருப்பவர்கள் தனுசும், உதயநிதியும்.
வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ், இசை அமைப்பாளர் அனிருத், தனுஷ் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். வருகிற பிப்ரவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் எமி ஹீரோயினாக நடிக்கிறார். தனுஷ் இதனை டுவிட் செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்து மான்கராத்தே இயக்குனர் திருக்குமரன் இயக்கும் கெத்து படத்தில் நடிக்க இருக்கிறார். இதிலும் எமிதான் ஹீரோயின். ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த படத்தை துவக்கிவிடுவது உதயநிதியின் வழக்கம். அந்த வகையில் நண்பேன்டா முடிந்ததும் கெத்துவை துவக்கி விட்டார். தற்போது உதயநிதியுடன், எமி நடித்து வருகிறார்.

இவர்கள் தவிர சிவகார்த்திகேயன், கார்த்தி, சிம்பு ஆகியோரும் தங்கள் படத்தில் எமி ஜாக்சனை ஹீரோயினாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget