ஒரு வீட்டின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட்ட முறையில் இருந்திட திட்டமிடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது குடும்பம்
நடத்துவதற்கும் கண்டிப்பான ஒன்றாகும். திட்டமிடாமல் செயல்படும் குடும்பங்கள் ஒரு கட்டத்தில் பல அவதிக்கு உள்ளாவார்கள்.
அதனால் நிதி சார்ந்த திட்டங்களை முறையாக சிந்தித்து தீட்டினால், அது அந்த குடும்பத்திற்கு பெரியளவில் கை கொடுக்கும். ஒரு குடும்பத்தை ஒரு ஆளாக நடத்தி விட முடியாது. என்ன தான் கணவன் சம்பாதித்து போட்டாலும், வீட்டை நிர்வாகம் செய்ய மனைவி தேவை தானே.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என கூட்டு முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே குடும்பம் சரியாக நடைபோடும். அதனால் சேமிப்பு என வரும் போது, கூட்டாக அமர்ந்து நிதி ரீதியாக உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைகளை பட்டியலிட்டு கொள்வது நல்லதாகும்.
1. சம்பளம் வந்தவுடன், ஏ.டி.எம்மில் இருந்து சம்பள பணத்தை எடுக்கும் முன்பு, அந்த மாதத்திற்கு உங்களுக்கான செலவுகளை எல்லாம் முதலில் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
2. எப்போதுமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா தொகையை (மாதம் ரூ.500/- என்ற வீதத்தில் ஒதுக்கினாலே போதும், சில மாதங்களில் நல்ல பலனை அளிக்கும்) ஒதுக்கி வைத்து கொள்ளுங்கள். இதனால் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் போன்றவைகளை கட்டும் தேவை ஏற்பட்டால், கையில் அதிகமாக பணம் இருக்கும் அல்லவா.
3. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி ரீதியான செலவுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதே நேரம், மாத செலவுகளை பற்றியும் யோசித்துக் கொள்ளுங்கள்.
4. சந்தையில் அளிக்கப்படும் சலுகைகளால் மயங்கி விடாதீர்கள். எந்த பொருளும் அத்தியாவசியமாக தேவைப்படாத பட்சத்தில் அதனை சும்மா வேடிக்கை மட்டும் பார்த்தாலே போதும். மனதை அலைபாய விடாதீர்கள்.
5. உங்கள் சுற்றுலாவை முன்கூட்டியே திட்டமிட்டு விடுங்கள். இதனால் விமான அல்லது இரயில் பயண சீட்டு செலவுகளுக்கு முன் கூட்டியே சேமிக்கலாம் அல்லவா? இது ஊக்கமளிக்கும் வகையிலும் அமையும். சேமிக்கும் வேளையில் வாழ்க்கையையும் மகிழ்ந்திடுங்கள்.

கருத்துரையிடுக