கணவரின் கோபத்தை சமாளிக்க எளிய வழி

கணவர் கோபமாக இருக்கும்போது, மனைவி நிச்சயம் அமைதியாக இருக்க வேண்டும். அதிலும் தேவையில்லாமல் திடீரென்று கோபத்துடன்
பேசுகிறார் என்றால், அலுவலகத்தில் உள்ள டென்சனாகத்தான் இருக்கும் என்று மனைவிமார்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்க வேண்டும்.

ஏனெனில் சாதாரணமாகவே பெண்கள் ஆண்களிடம் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கணவன் கோபமாக இருக்கும்போது, கேள்விகளை கேட்டால்?. ஆகவே அவர்களை சற்று நேரம் தனிமையில் விட வேண்டும்.

ஆர்வக்கோளாறில் கோபத்துடன் இருக்கும் கணவரிடம் சென்று, என்ன பிரச்சனை என்று உடனே அவரது பிரச்சனைகளைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனெனில் பொதுவாக கோபமாக இருப்பவர்கள் சாந்தமடைய வேண்டுமெனில், அவர்களை தனியாக யோசிக்க விட வேண்டியதுதான். இதனால், அவர்கள் கோபத்திற்கான காரணத்தை யோசித்து, அமைதியாகி அவர்களே வந்து பேசுவார்கள். சில நேரங்களில் தனிமையால் கூட கோபத்தை அடக்க முடியாது. அதுமட்டுமின்றி, சிலர் மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். எனவே கணவர் கோபமாக இருக்கும்போது, அருகில் சென்று தொடும்போது அவர்கள் அமைதியாக சென்று விடு என்று சொன்னால் மட்டுமே, தனிமையில் விட வேண்டுமே தவிர, அவ்வாறு சொல்லாவிட்டால், அவர்கள் கோபத்தின் காரணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அர்த்தம். எனவே இதைப் புரிந்து நடந்து கொள்ளுமல் நல்லது.

ஒருவேளை கணவர் உங்களது செயலால் தான் கோபமடைந்துள்ளார் என்றால், அப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதிலும் இந்த மாதிரியான காரணத்தினால் வரும் கோபத்தை எளிதில் போக்க முடியாது. ஏன், அவர்களிடம் பேசக்கூட முடியாது. ஏனெனில் அந்த அளவில் கணவருக்கு கோபமானது இருக்கும். ஆகவே இந்த மாதிரியான சூழ்நிலையில், அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு அழகான கவிதை அல்லது மன்னிப்பு என்று எழுதிய பேப்பரை வைத்து கேட்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget