நட்பின் நூறாம் நாள் சினிமா விமர்சனம்

நடிகர் : விஜய் சிரஞ்சீவி
நடிகை : சாய்னா
இயக்குனர் : ராஜா தேசிங்கு
இசை : முறால்
ஓளிப்பதிவு : ராஜா


நாயகன் விஜயும் (விஜய் சிரஞ்சீவி), இப்ராகிமும் (தோனி) சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். தோனியை யார் என்ன சொன்னாலும் செய்தாலும் யார் என்று பார்க்காமல் விஜய் அடித்து வருகிறார். இவர்கள் இருவரும், பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்று எண்ணி ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் இதேபோன்று தோழிகளான சுமதியை விஜய்யும், ரம்யாவை இப்ராகிமும் காதலிக்கிறார்கள். சுமதியும் விஜய்யும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். ஒருநாள் வழியில் விஜய் வேலை செய்யும் கம்பெனியின் எம்.டி.யான விமலாவை மர்ம கும்பல் ஒன்று துரத்துகிறது. அவர்களிடம் இருந்து விமலாவை காப்பாற்றுகிறார்.

அதிலிருந்து விஜய் மீது காதல் வயப்படுகிறார் விமலா. பிறகு கம்பெனியில் சுமதியை விஜய் காதலிப்பதை அறிகிறார். அதனால் கோபமடையும் விமலா இவர்களை காதலை பிரிக்க நினைக்கிறார். மேலும் விஜய்க்கு இரவு வேலைக்கு வர சொல்லுகிறார் விமலா. இதற்கு விஜய் என்னால் வர முடியாது என்றும் என் நண்பன் இரவில் தனியாக இருந்தால் பயப்படுவான் என்று கூறி வேலையை விட்டுவிடுகிறான்.

வேலை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு விஜய்யின் நண்பன் யார் என்று தெரிந்துக் கொள்ள அவர்கள் வீட்டுக்கு செல்கிறாள் விமலா. ஆனால் விமலாவால் நண்பனை பற்றி தெரிந்துக் கொள்ள முடியாமல் போகிறது. நண்பனை விட்டு பிரியாத விஜய்யின் நட்பையும் பிரிக்க நினைக்கிறாள்.

ஒரு கட்டத்தில் விஜய்யின் வீட்டிற்கு செல்கிறாள் விமலா. அங்கு விஜய்யின் நண்பன் இப்ராஹிம் இறந்த நிலையில் அவருடன் விஜய் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கிறாள். மேலும் நண்பனின் பிணத்தை வைத்துக் கொண்டு அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதை பார்க்கிறாள். இதைக் கண்டு அதிர்ந்து போகிறாள் விமலா.

இவ்வாறு இப்ராஹிம் பிணத்துடன் விஜய் இருப்பதற்கு காரணம் என்ன? இப்ராஹிம் இறப்பதற்கு என்ன காரணம்? இவர்களின் நட்பு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

படத்தில் விஜய் சிரஞ்சீவி ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் நடிப்புதான் வெளிவர தயங்குகிறது. முதல் பாதியில் காதல் நாயகனாகவும் இரண்டாம் பாதியில் சைக்கோவாகவும் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். இவருக்கு நண்பராக நடித்திருக்கும் தோனி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் சாய்னா, மிருதுளா, ரிவேதாஸ்ரீ ஆகியோர் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். மேலும் கோவை சரளா, பாண்டியராஜன், காதல் சுகுமார் ஆகியோர் செய்யும் காமெடி படத்தில் பெரியதாக எடுபடவில்லை. வித்தியாசமான கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட்  சிறப்பாக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா உலகில் காதலுக்கு மரியாதை செலுத்தியதை விட நட்புக்கு மரியாதை செலுத்தியவர்கள்தான் அதிகம் வெற்றி கண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இயக்குனர் ராஜா தேசிங்கு வெற்றி கண்டிருக்கிறாரா என்பது கேள்விக்குறிதான். படத்தில் தெளிவான திரைக்கதை இல்லை. நிறைய லாஜிக் மீறல்கள். இறந்த நண்பன் போன் செய்வது, காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் இருப்பது என்று நிறைய விஷயங்களை கவனிக்காமல் விட்டிருக்கிறார். முதல் பாதி திரைக்கதை குழப்பத்திலேயே செல்கிறது. இரண்டாம் பாதி சைக்கோ திரைக்கதையில் வலுவில்லாமல் செல்கிறது.

முராள் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகளை இன்னும் தெளிவாக காண்பித்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘நட்பின் நூறாம் நாள்’ கடைசி நாள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget