இந்தியா பாகிஸ்தான் கதை விமர்சனம்

சலீம் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் இந்தியா பாகிஸ்தான். ஆனந்த் இயக்குகிறார். இவர் யாரடி நீ மோகினி மித்ரன்
ஜவஹரிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவரது தம்பி ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். விஜய் ஆண்டனியின் படத்துக்கு இன்னொருவர் இசை அமைப்பது இதுதான் முதல் முறை. தெலுங்கு கன்னட படங்களில் நடித்த சுஷ்மா தமிழில் அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

இந்தப் படம் நான், சலீம் படங்களின் தொடர்ச்சி இல்லையாம். காதலனும், காதலியும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி மோதிக்கொண்டே இருக்கிற ஈகோ கதை. ஈகோவால் வரும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை. நான், சலீம் படங்களில் கோப முகத்தோடு சீரியசாக நடித்த விஜய் ஆண்டனி இதில் சிரித்த முகத்தோடு காமெடியெல்லாம் செய்கிறார். பொள்ளாச்சியிலும், சென்னையிலும் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி சைத்தான் என்ற படத்தில் நடிக்கிறார். இது திகில் படம். அதற்கு பிறகு சசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் நடிக்கிறார். இது சமூக பிரச்சினை ஒன்றை அலசப்போகும் படம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget