ஆக்சன் ஜாக்சன் சினிமா விமர்சனம்

நடிகர் :  அஜெய் தேவ்கான்
நடிகை : சோனாக்ஷி சின்ஹா, யாமி கவுதம்
இயக்குனர் : பிரபுதேவா


தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பிரபுதேவா, பாலிவுட்டிலும் வெற்றி கொடி நாட்டி, 'சிங்கம்' அஜய் தேவ்கானை வைத்து இயக்கியிருக்கும் ஆக்ஷ்ன் படம் தான் ஆக்ஷ்ன் ஜாக்சன். தொடர் ஹிட்டுகளை கொடுத்த பிரபுதேவாவிற்கு ஆக்ஷ்ன் ஜாக்சன் படம் வெற்றியை கொடுத்ததா என்று இனி பார்ப்போம்...

விஷி எனும் அஜய் தேவ்கான், குஷி எனும் சோனாக்ஷி சின்ஹாவை காதலிக்கிறார். குஷிக்கோ, விஷியை குறைந்த உடைகளில் பார்த்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும், நல்ல வாழ்க்கை அமையும், அமெரிக்காவில் கல்யாணம் பண்ணி செட்டிலாகலாம் என்று ஒருவித நினைப்பிலேயே இருக்கிறார். இதுஒருபுறம் இருக்க ஏஜே., எனும் மற்றொரு அஜய், மரினா எனும் மனாஸ்வியின் அண்ணன் கம் பெரிய தாதாவிடம் அடியாளாக இருக்கிறார். மரினாவை ஒரு இக்கட்டான சூழலில் காப்பாற்ற, அப்போது முதல் மரினாவுக்கு ஏஜே மீது காதல் வருகிறது. ஆனால் ஏஜே., யாமி கெளதமை விரும்புகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ஆக்ஷ்ன் கம் ரொமான்ஸ் நிறைந்த ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தின் கதை...!

அஜய், விஷி-ஏஜே என இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து இருக்கிறார். வழக்கம் போல அஜய் தன் நடிப்பால் ரசிகர்களை கவருகிறார். அதிலும் ஆக்ஷ்ன் காட்சிகளில் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். ஆனால் நடனம் தான் அவருக்கு சுத்தமாக வரவில்லை. அவருக்கு ஏன் இப்படி ஒரு கதை மற்றும் நடன அசைவுகளை இயக்குநர் பிரபுதேவா வைத்தார் என்று தெரியவில்லை.
சோனாக்ஷியின் நடிப்பு நன்றாக இருக்கிறது ஆனால் புதிதாக ஒன்றுமில்லை.
யாமி கவுதமிற்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. மற்றொரு அறிமுக ஹீரோயினான மனாஸ்வி நடிப்பு சுத்தமாக வரவேயில்லை. வெறும் உடம்பை மட்டும் காட்டிக்கொண்டு நடித்திருக்கிறார். விஷியின் நண்பராக வரும் குணால் ராய் கபூரின் நடிப்பும் சுமார் தான்.

படத்தின் ப்ளஸ் இசை தான். ஹிமேஷ் ரேஸ்மயாவின் பாடல்கள் பிரமாதம். குறிப்பாக கேங்ஸ்டார் பேபி, கீடா பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. பஞ்சாபி மஸ்தி பாடலுக்கு ஷாகித் கபூர் அதேசமயம் பின்னணி இசை சுமார் தான். ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் ஓ.கே. என்ற அளவில் தான் இருக்கிறது.

வலுவான கதையில்லாமில் வெறும் ஆக்ஷ்ன் மற்றும் பாடல்களை மட்டும் வைத்து படத்தை வெற்றி பெற செய்துவிடலாம் என்று பிரபுதேவா தப்பு கணக்கு போட்டுவிட்டார். முந்தைய படங்களில் அவருக்கு கை கொடுத்த இந்த லாஜிக், இந்த முறை ஏமாற்றிவிட்டது. பிரபுதேவா இயக்கிய படங்களிலேயே இந்தப்படம் தான் மிகவும் மோசமான படம் என்று சொல்லலாம். ஆனாலும் அஜய் தேவ்கானுக்காக படத்தை பார்க்கலாம்.

மொத்தத்தில், ஆக்ஷ்ன் ஜாக்சன் - அஜய் தேவ்கானின் ரசிகர்களுக்கு மட்டும்... மற்றவர்களுக்கு....?!!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget