உங்லி சினிமா விமர்சனம்

நடிகர் :  இம்ரான் ஹாஸ்மி, சஞ்சய் தத்
நடிகை : கங்கனா ரனவத்
இயக்குனர் : ரென்சில் டி சில்வா



குர்பான் படத்திற்கு பிறகு ரென்சில் டி சில்வா இயக்கத்தில் வெளிந்திருக்கும் படம் உங்லி. உங்லி எனும் கேங்கை பற்றியது தான் இப்படம். சரி இனி உங்லி ரசிகர்களை கவர்ந்ததா...? என்று இனி பார்ப்போம்...!

நிகில் எனும் இம்ரான் ஹாஸ்மி, போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். தனது வேலை எப்பேற்பட்டது என்பதை உணராமல் அக்கறையின்றி ஏனோ தானோ என்று இருக்கிறார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய போலீசாரின் வேலையை உங்லி எனும் கும்பல் செய்கிறது. இதனால் சாதாரண மக்களுக்கு உங்லி கும்பல் கடவுளாகவும், போலீசுக்கு சமூக விரோதிகள் போன்றும் தோன்றுகிறது. இந்த குழுவை பிடிக்க ஏசிபி கலேயை(சஞ்சய் தத்) நியமிக்கிறார் போலீஸ் கமிஷனர் ரசா முராத். இம்ரானின் அப்பாவின் நண்பரான சஞ்சய், உங்லி கேங்கை பிடிக்க இம்ரானை நியமிக்கிறார்.

உங்லி குழுவின் தலைவனாக காஸ்யாப்(ரன்தீப் ஹூடா) இருக்கிறார். இவருடன் மாயா(கங்கனா ரணாவத்) மற்றும் நீல் பூபலம், அன்காத் பேடி ஆகியோர் இணைந்து ஊழல் அதிகாரிகளை பிடித்து தண்டிக்கின்றனர். இவர்களை பிடிக்க இம்ரான் செல்கிறார். ஒருகட்டத்தில் உங்லி கேங் மக்களுக்கு நல்லது தான் செய்கிறார் என்று கருதி உங்லி குழுவுடன் இம்ரானும் இணைகிறார். தொடர்ந்து உங்லி குழுவுடன் இணைந்து இவரும் ஊழல் அதிகாரிகளை தண்டிக்கிறாரா.? இல்லை உங்லி குழுவை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா..? என்பது உங்லி படத்தின் மொத்த கதை.
படத்தின் ஹீரோ இம்ரான் ஹாஸ்மி என்றாலும் ரன்தீப் ஹூடா தான் படம் முழுக்க வருகிறார். ஆனால் படத்தின் கதை வலுவாக இல்லாததால் ரன்தீப்பின் நடிப்பு சுமாராகவே தெரிகிறது.

இம்ரான் ஹாஸ்மியின் ரோல், கேரக்டர் ரோல் போன்று தோன்றுகிறது. இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவருகிறார். கங்கனா, சஞ்சய் தத் ஆகியோரின் நடிப்பு சுமார் தான். நேகா தூபியா, அன்காத் பேடி, நீல் பூபலம் ஆகியோரது நடிப்பு ஓ.கே.

படத்தின் பின்னணி இசை ஓ.கே., ஆனால் பாடல்கள் கேட்கும்படியாக இல்லை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் சிறப்பாக இருக்கிறது. ஆர்ட் மற்றும் காஸ்டியூமும் கூட சுமார் தான்.

சமூகத்திற்கு நல்ல மெசேஸ்ஜ் சொல்வது போன்று படம் எடுப்பதாக சொல்லி, அதில் சினிமாத்தனத்தையும், கமர்ஷியல் விஷயங்களையும் இணைத்து உங்லி படத்தை ஒரு நாடகம் போன்று இயக்கியுள்ளார் ரென்சில் டி சில்வா. வலுக்கட்டாயமாக பாடல்கள் திணிப்பு, சரியான திரைக்கதை இல்லாததால் உங்லி, டம்மியாக தெரிகிறது.

சமூக சேவையில் ஈடுபட நினைப்பவர்கள் உங்லி படத்தை பார்க்கலாம்.
உங்லி - அக்லி-ஆக தெரிகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget