Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம்
இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதே இதைக் குறிக்கிறது. அஞ்சல் யாருக்கு எழுதப்படுகிறதோ, அவரின் முகவரி “To:” என்ற பிரிவில் அமைக்கப்படுகிறது.
Blind Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், “BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது.
Driver: (ட்ரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் தரப்படும்.
Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது மேலே குறிப்பிட்டுள்ள சாதனங்களைப் பெற்றவுடன், இவற்றை நீக்கிவிடலாம். இதனால், தேவையின்றி நம் ராம் மெமரி இடம் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.

கருத்துரையிடுக